ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் விவகாரத்தில் பிரிட்டன் பிரதமர் தெரசா மேவுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான மசோதாவில் அந்நாட்டு பிரதமர் தெரசா மேவுக்கு தோல்வி ஏற்பட்டிருக்கிறது. பிரிட்டன் வெளியேறுவது தொடர்பான இறுதி உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டும் என்பதை இந்த மசோதா வலியுறுத்துகிறது. கன்சர்வேடிவ் கட்சியில் தெரசா மேவுக்கு எதிரான எம்பி ஒருவர் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.
மசோதாவுக்கு ஆதரவாக 309 பேரும், எதிராக 305 பேரும் வாக்களித்தனர். இதனால் இறுதி உடன்பாட்டுக்கு நாடாளுமன்றத்தில் அனுமதி பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருக்கிறது. இது பிரதமர் தெரசா மேவுக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. ஆளும் கன்சர்வேடிவ் கட்சியில் தெரசா மேவுக்கு எதிராக எம்.பி.க்கள் சிலர் திரண்டிருப்பதே இதற்குக் காரணமாகும்.