”எங்களுக்கு ஒரு ட்ரம்ப் தேவை; அதே வகையான புரட்சி..”-பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் எலிசபெத் லிஸ் ட்ரஸ்!

”எங்களுக்கு ஒரு பிரிட்டிஷ் ட்ரம்ப் தேவை” என பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் எலிசபெத் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.
டொனால்டு ட்ரம்ப், எலிசபெத் லிஸ் ட்ரஸ்
டொனால்டு ட்ரம்ப், எலிசபெத் லிஸ் ட்ரஸ்எக்ஸ் தளம்
Published on

பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் எலிசபெத் லிஸ் ட்ரஸ் பேச்சு

அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்டு ட்ரம்ப் அடுத்த ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்க உள்ளார். இதையடுத்து, அவரது அரசு நிர்வாகத்தில் அமைச்சர்கள், உயர் பொறுப்பு வகிக்கக் கூடியவர்கள் தற்போது தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். மேலும், அவருடைய ஆட்சி நிர்வாகத்தின் முன் நிற்கும் எதிர்கால சவால்கள் குறித்தும் பேசப்பட்டு வருகிறது. தவிர, அவர் தேர்தலில் பெற்ற வெற்றியும் பேசுபொருளாகி வருகிறது. இந்த நிலையில், ”எங்களுக்கு ஒரு பிரிட்டிஷ் ட்ரம்ப் தேவை” என பிரிட்டிஷ் முன்னாள் பிரதமர் எலிசபெத் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார்.

டொனால்டு ட்ரம்ப்
டொனால்டு ட்ரம்ப்எக்ஸ் தளம்

HT தலைமைத்துவ உச்சி மாநாடு 2024 உரையாடலின்போது இத்தகவலைத் முன்னாள் பிரதமர் எலிசபெத் லிஸ் ட்ரஸ் தெரிவித்துள்ளார். அப்போது பேசிய அவர், ”தொழில்நுட்பம், பாதுகாப்பு, விவசாயம் போன்ற துறைகளில் இங்கிலாந்தும் இந்தியாவும் ஒன்றுக்கொன்று பலனளிக்க வேண்டும். இதில் பெரிய வாய்ப்புகள் உள்ளன. ஆனால், இந்தியா இப்போது மக்கள்தொகை அடிப்படையில் உலகின் மிகப்பெரிய நாடாகவும், உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் உள்ளது. இதனால், எதிர்காலத்தில் ஒரு பெரிய தலைமைப் பாத்திரத்தை வகிக்கப் போகிறது. இந்தியா-இங்கிலாந்து தடையற்ற வர்த்தக உடன்படிக்கையில், இது முற்றிலும் சமமான உறவு ஆகும். இதையடுத்து, வர்த்தக ஒப்பந்தம் செய்யப்படுவதற்கு இரு தரப்பினரும் விட்டுக்கொடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

இதையும் படிக்க: மகாராஷ்டிரா தேர்தல்|கடும் போட்டியில் இரண்டுகூட்டணி; மீண்டும் காத்திருக்கும் முதல்வர் பதவி பஞ்சாயத்து

டொனால்டு ட்ரம்ப், எலிசபெத் லிஸ் ட்ரஸ்
ட்ரம்ப் நிர்வாகத்தில் பதவி.. தொடக்கமே அதிரடி.. எலான் மஸ்க் பதிலடி.. விவேக் ராமசாமி சரவெடி!

”எங்களுக்கு ஒரு பிரிட்டிஷ் ட்ரம்ப் தேவை!”

தொடர்ந்து பேசிய அவர், “பிரிட்டிஷ் அதிகாரத்துவத்தில் சில ஏற்பாடுகள் சரி செய்யப்பட வேண்டும். இது, சிறந்த சீர்திருத்தங்களைப் பார்க்க விரும்புகிறது. இது அமெரிக்காவில் தொடர்புடைய எண்ணிக்கையைவிட குறைவாக உள்ளது. இதனால் வெளிப்படையாக, எங்களுக்கு ஒரு பிரிட்டிஷ் ட்ரம்ப் தேவை என்று நினைக்கிறேன். அந்த நபர் யாராக இருக்கலாம் என்பதுதான் என் கேள்வி. ஆனால் அந்த வகை அணுகுமுறைதான் இப்போது பிரிட்டனில் மாற்றத்தைப் பெற வேண்டும்.

அமெரிக்காவில் ட்ரம்ப் வழங்கும் அதே வகையான புரட்சி, உண்மையில் இடதுசாரி ஸ்தாபனத்தை எடுத்துக்கொள்கிறது; மக்களுக்கு அதிக அதிகாரம் அளிக்கிறது; வணிகங்களுக்கு அதிக வாய்ப்புகளை அளிக்கிறது; அதை எளிதாக்குகிறது.

ஒரு வெற்றிகரமான நிறுவனத்தை நடத்துங்கள். ஆனால் எங்களிடம் மிகவும் சக்திவாய்ந்த அதிகாரத்துவம் உள்ளது. அது எங்களை ஐரோப்பாவுடன் இணைக்க விரும்புகிறது. அமெரிக்காவில் நாம் காணும் ட்ரம்ப் புரட்சி, அது ஐரோப்பாவில் வருகிறது. அதற்கு உதாரணமாய் பிரான்ஸ், ஜெர்மனியில் பொருளாதார தேக்கநிலையில் உள்ள அதிருப்தியை நீங்கள் பார்க்கலாம். அந்த அதிருப்தி ஐரோப்பாவிலும் வரப்போகிறது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடாவில் நடக்கப் போகிறது. ஜனநாயகக் கட்சியினருக்கு அமெரிக்காவில் நடைபெற்றது. அதிகாரத்தில் நீடிப்பது மிகப்பெரிய சாதனையாகும், இது இந்தியாவில் நடக்கும் பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஒரு சான்று” என்றார்.

இதையும் படிக்க: தினசரி ஒரு மில்லியன்.. X தளத்திலிருந்து வெளியேறி Blueskyயில் இணையும் பயனர்கள்.. காரணம் இதுதான்!

டொனால்டு ட்ரம்ப், எலிசபெத் லிஸ் ட்ரஸ்
லிஸ் ட்ரஸ் பதவி விலகல்... இந்திய வர்த்தகத்தில் பிரச்னையா?அமைச்சர் பியூஷ் கோயல் சொல்வதென்ன?

”இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ளதை வேறுபடுத்திக் காட்டுவேன்!”

மேலும் அவர், “உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக இருக்கும் புவிசார் அரசியலில் எதிர்காலத்தில் இந்தியாவுக்கு பெரும் பங்கு உண்டு என்று நான் நினைக்கிறேன். உலகளாவிய விவாதங்கள் குறித்து இந்தியாவிடம் இருந்து மேலும் பலவற்றைப் பெற விரும்புகிறோம். அதிபர் ட்ரம்ப் ஆட்சியில், சர்வதேச உறவுகள் எவ்வாறு செயல்பட இருக்கின்றன என்பதை மறுவடிவமைக்க ஒரு வாய்ப்பு உள்ளது. அதிகாரத்தில் நிச்சயமாக உலகளாவிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. வருந்தத்தக்க வகையில், சர்வாதிகார ஆட்சிகளை நோக்கி அதிகாரம் மாறியுள்ளது. ஈரான், ரஷ்யா, சீனா உள்ளிட்ட நாடுகளை, நாங்கள் சமீபத்திய ஆண்டுகளில் உண்மையாக இப்படிப் பார்த்ததில்லை. இதை, நான் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையில் உள்ளதை வேறுபடுத்திக் காட்டுவேன். இந்தியா ஒரு ஜனநாயக நாடு, சட்டத்தின் ஆட்சி மற்றும் பேச்சு சுதந்திரம் பாதுகாக்கப்படுவதை இந்தியா பார்க்க விரும்புகிறது” எனத் தெரிவித்தார்.

கடந்த 2022ஆம் ஆண்டு, செப்டம்பர் மாதம் பிரதமராகப் பதவியேற்ற நிலையில், அடுத்த 45 நாட்களில் தனது பதவியை ராஜினாமா செய்தார். வரி குறைப்புகளை ஆதரிக்கும் வகையில் திட்டங்களை வெளியிட்டது அவரது கட்சியிலேயே எதிர்ப்பு கிளம்பியது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: 2025-ல் வங்கதேசத்தில் பொருளாதாரத் தடை.. ட்ரம்பிடம் கோரிக்கை வைக்க முடிவு.. எதற்கு தெரியுமா?

டொனால்டு ட்ரம்ப், எலிசபெத் லிஸ் ட்ரஸ்
பிரதமராக இருந்தது 45 நாள்தான்.. வாழ்நாள் முழுக்க லிஸ் ட்ரஸ் பெறப்போகும் தொகை இவ்வளவா?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com