காங்கோ நாட்டில், திறப்பு விழாவின்போதே புதிய பாலம் இடிந்து விழுந்த நிகழ்வு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெஹ்ரான் என்ற இடத்தில் பாயும் ஆற்றை கடக்கும் விதமாக சிறிய பாலம் ஒன்று கட்டப்பட்டு ரிப்பன் வெட்டித் திறக்கப்பட்டது. இந்த நிலையில், பாலத்தில் அதிகளவில் ஆட்கள் நின்றதால், ரிப்பனை வெட்டிய அடுத்த நொடி பாரம் தாங்காமல் பாலம் இரண்டாக உடைந்தது. இதனால் பாலத்தின் மீதிருந்த அதிகாரிகள் பதறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தனர். அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. எனினும், புதிதாகக் கட்டப்பட்ட பாலம் திறப்பு விழாவின்போதே இடிந்து விழுந்த நிகழ்வு அதிர்வலைகளை கிளப்பியுள்ளது.
பாலம் ரிப்பன் வெட்டி திறக்கப்படும் போது இடிந்து விழும் காட்சிகள் அடங்கிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்நாட்டு குடிமக்கள் பலர் கடும் விமர்சனங்களை எழுப்பி இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். ட்விட்டர் பயனர் ஒருவர் “ரிப்பன் தான் அந்த பாலத்தை தாங்கியிருந்தது போல. அதை வெட்டியவுடன் பாலம் இரண்டாக உடைந்து விட்டது” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.