பிரேசிலில் உள்ள சிறைச்சாலையில் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் 33 கைதிகள் கொல்லப்பட்டதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பிரேசிலின் மாகாணத்தில் ரோராய்மா மாநிலத்தில் உள்ள சிறைச்சாலையில் இரு பிரிவு கைதிகளுக்கிடையே ஏற்பட்ட மோதலில் சக கைதிகளால் 33 சிறை கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்களின் குடல், இதயம் வெளிவந்ததாகவும், தலை துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், சிலரின் கை மற்றும் கால்கள் கொடூரமாக வெட்டப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த அக்டோபர் மாதமும் இதே சிறைச்சாலையில் கலவரம் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
கடந்த திங்கட்கிழமை பிரேசிலின் அமேசான் மாகாணத்தில் மனாஸ் நகரில் உள்ள சிறைச்சாலையில் பயங்கர கலவரம் ஏற்பட்டு 60 கைதிகள் உயிரிழந்தனர். மேலும் ஏராளமான கைதிகள் தப்பி ஓடியது குறிப்பிடத்தக்கது.