நாயை காப்பாற்ற ஏரிக்குள் குதித்த அதிபரின் மனைவி!

நாயை காப்பாற்ற ஏரிக்குள் குதித்த அதிபரின் மனைவி!
நாயை காப்பாற்ற ஏரிக்குள் குதித்த அதிபரின் மனைவி!
Published on

தனது செல்ல நாய், ஏரிக்குள் விழுந்ததை அடுத்து அதைக் காப்பாற்ற அதிபரின் மனைவி திடீரென்று ஏரிக்குள் குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரேசில் அதிபர் மைக்கேல் டெமரின் மனைவி மார்சிலா. பணத்தை தண்ணியாக செலவழிப்பது என்பார்களே, அதற்கு ஒரே சாட்சி இவர்தான் என்கிறது பிரேசில் மீடியா. ஆடம்பரத்துக்கும் குறைவில்லாதவர். இவர் அணியும் உடைகள் பயங்கர காஸ்ட்லி வகை. இதற்காக அதிகம் விமர்சிக்கப்படுபவர். 

முன்னாள் அழகியான இவர், தனது மகனுடன் பங்களாவில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் வளர்க்கும் பிக்கோலி, தோர் ஆகிய இரண்டு செல்ல நாய்க்குட்டிகளும் உடன் வந்தன. அதில் பிக்கோலி, அருகில் இருந்த ஏரிக்குள் குதித்து விளையாடியது. ஆனால், அதனால் நீந்தி கரையேற முடியவில்லை. தவித்துக்கொண்டிருந்த அதைக் கண்டதும், மார்சிலா தவித்தார். அடுத்த நொடியே, அப்படியே ஏரிக்குள் குதித்தார்.

பின்னர் அதை மீட்டு கரைக்குக் கொண்டு வந்தார். இந்த சம்பவம் கடந்த மாதம் 22 -ம் தேதி நடந்துள்ளது. ஆனால் சமீபத்தில்தான் வெளியே தெரிய வந்திருக்கிறது. அந்த நாயை ஏரிக்குள் குதித்து காப்பாற்றாத பாதுகாவலர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதோடு இந்த சம்பவத்தை வைத்து சமூக வலைத்தளங்களில் மார்சிலாவை அதிகமாக கிண்டலடித்துள்ளனர். 
 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com