300 பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பிரேசில் மதபோதகர் அந்நாட்டு நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
பிரேசிலில் கடவுளின் தூதர் என அழைக்கப்படும் ஜவாகோ டீக்ஸீரா டி ஃபரியா என்பவர் மதபோதகராகவும், மனநல மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இவர் ஆன்மிக முறையில் மனநல நோய்களுக்கு சிகிச்சை அளித்து வந்தார் என கூறப்படுகிறது. அதே நேரத்தில் இவர் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்கிறார் என்ற குற்றச்சாட்டுகளும், சர்ச்சைகளும் எழுந்து வந்தன.
இந்நிலையில் 300க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜவாகோ மீது சில மாதங்களுக்கு முன் அவர் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த பிரேசில் காவல்துறையினர் அந்த மதபோதகரிடம் விசாரணை நடத்தினர். அப்போது காவல்துறையினருக்கு பதிலளித்த அவர், 30க்கும் மேற்பட்ட மருத்துவர்களின் ஆவி தன் மீது புகுந்து பெண்களை வன்கொடுமை செய்ததாக கூறினார். இந்நிலையில் அவர் நேற்று நீதிமன்றத்தில் சரணடைந்தார்.