சூரியனை கண்டால் ஓடி ஒளிந்து, பல காலமாக நிழலுக்குள்ளேயே வாழும் ஸ்பெயினை சேர்ந்த 11 வயது சிறுவன் ஒருவனின் வாழ்க்கை, uv மீட்டரின் உதவியோடு தொடர்ந்து வருகிறது. யார் அந்த சிறுவன்? அவன் வாழ்க்கை எப்படி போகிறது? விரிவாக பார்க்கலாம்...
11 வயது சிறுவன் போல் டாமின்க்யுஸ் (pol dominguez), ஸ்பெயின் நாட்டில் வசித்து வருகிறார். இவரின் கோடை விடுமுறை மற்ற சிறுவர்களை போல கடற்கரையிலும், வெயிலில் விளையாடியோ, குளத்திலேயோ கழிக்கப்படுவதில்லை. வெயிலை கண்டாலேயே ஏதாவது நிழலுக்கு அடியில் மறைந்து கொள்ளும் இச்சிறுவன் வீட்டிற்குள்ளேயேதான் தனது கோடை விடுமுறையை கழிப்பார்.
பொதுவாக, சூரிய ஒளி உடலில் பட்டால் வைட்டமின் டி சத்து கிடைக்கும், இதனால், தசைகள் வலிமை பெறும், எலும்புகள் உறுதியாகும். இது இல்லாமல் போனால் சரியான நோய் எதிர்ப்பு சத்து இல்லாமல், பல நோய்கள் ஏற்படும் அபாயம் உள்ளது.
ஆனால், 11 வயதான போல் டொமிங்குஸ்-க்கு (Pol Dominguez) சூரிய ஒளிக்கதிர்கள் பட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. ஏனெனில், ஒவர் அரிதான Xeroderma Pigmentosum (XP) என்ற நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால், இவரின் தோல் மற்றும் கண்கள் பாதிப்படைகிறது.
பொதுவாக இவ்வகையான நோயால் பாதிக்கப்பட்டவர்களின் DNA சிதைவடைந்து, சரிசெய்ய இயலாமல், புற்றுநோயை ஏற்படுத்தும் அளவிற்கு பாதிப்பை உண்டாக்கும். ஆனால், இவ்வகையான பரம்பரை நோய் ஆரம்பக்காலத்திலேயே கண்டறியப்படுகிறது.
போல் டொமிங்குஸை பொறுத்தவரை, எதிர்பாராமல் சூரியஒளியில் நின்றால் கூட, இவரின் தோல்களில் தீக்காயங்கள் போன்ற புண்கள் ஏற்படுகிறது. பார்சிலோனாவில் வசிக்கும் இச்சிறுவன் மற்றும் அவரது குடும்பத்தினர், இதுபோன்ற புற ஊதாக்கதிர்களில் இருந்து, தற்காத்து கொள்ள மிகவும் தீவிரமாகவும், கவனமாகவும் தங்களின் அன்றாட வாழ்க்கையை கடைப்பிடித்து வருகிறார்கள்.
கோடை காலங்களில் எப்பொழுதும் இவர் வீட்டின் உள்ளேயே தான் இருப்பார். எதிர்பாராத விதமாக வெளியில் செல்ல நேர்ந்தால், உடலில் ஏற்படும் கடுமையான கொப்பளங்களில் இருந்து தற்காத்து கொள்ள உடல் முழுவதும் பாதுகாப்பான ஆடையையும், ஜாக்கெட், சன்கிளாஸ், கையுறைகள், குறிப்பாக uv மீட்டரின் உதவியோடு மட்டும் தான் வெளியில் செல்வாராம்.
இது வெயில் காலத்தில் மட்டுமல்ல, கடுமையான குளிர் காலத்திலும் பொறுந்தும். மேலும், இவர் பள்ளி அறைகளிலும், ஜன்னல்கள் மற்றும் விளக்குகள் இவருக்கு ஏற்றார் போல மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
மேலும், மிகவும் பாதுகாப்பான உடைகளை அணிவதால், உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பதால், இவர் முகத்தில் அணிந்திருக்கும் கேடயம் ஒன்றுடன் ஒரு சிறிய விசிறியையும் அணிந்திருப்பாதாக தெரிவித்துள்ளார்.
இச்சிறுவனின் தாய் இதை பற்றி தெரிவிக்கையில், "நாங்கள் இரவு நேரத்தில்தான் வெளியே செல்வோம். இரவு 10 மணியளவில் நாங்கள் செல்கிறோம். அப்போது. நாங்கள் என்ன செய்ய விரும்புகிறோமோ அதை செய்வோம். கடற்கரைக்குப் போய், ஐஸ்கிரீம் சாப்பிடுவோம்.” என்று தெரிவித்தார்.
சூரியனை கண்டால் ஒடி ஒழிந்து, பல காலமாக நிழக்குள்ளேயே வாழும் ஸ்பெயினை சேர்ந்த 11 வயது சிறுவன் வாழ்க்கை நிச்சயம் ஒரு சவால் தான்.