பிரிட்டன் பொதுத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், பிரதமர் போரிஸ் ஜான்சனின் பழமைவாத கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
346 தொகுதிகளில் வெற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 180 இடங்களை பழமைவாத கட்சி வென்றுள்ளது. தொழிலாளர் கட்சி 120 இடங்களில் வென்றுள்ளது. ஸ்காட்டிஸ் தேசிய கட்சி 25 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. பழமைவாத கட்சியே முன்னிலை வகித்து வருவதால் மீண்டும் அவர்களே ஆட்சி அமைப்பர் என சொல்லப்படுகிறது. கடந்த தேர்தலை விட இம்முறை அதிக எண்ணிக்கையிலான இடங்களை பழமைவாத கட்சி வெல்லும் என கூறப்படுகிறது.
எனவே அவர்கள் வாக்குறுதி அளித்தபடி பிரெக்ஸிட் நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே தொழிலாளர் கட்சி தேர்தலில் கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. இதற்கு பொறுப்பேற்று அக்கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.