பாகிஸ்தான் சந்தை அருகே நிகழ்ந்த குண்டுவெடிப்பில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் காயமடைந்தனர்.
பாகிஸ்தானின் காரிஸன் நகரமான ராவல்பிண்டியில் பரபரப்பாக சந்தை இயங்கிக் கொண்டிருந்தது. அப்போது அங்கு வந்த சில மர்மநபர்கள் வெடிகுண்டை வீசிச் சென்றனர். அந்த குண்டு வெடித்ததில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 15 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டு வெடித்த பகுதி முழுவதும் மோசமாக சேதமடைந்துள்ளன. அதிகாரிகள் அப்பகுதிகளை வளைத்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
புலனாய்வு குழுக்கள் மற்றும் தடய அறிவியல் ஆய்வகத்தைச் சேர்ந்தவர்கள் அப்பகுதியிலிருந்து ஆதாரங்களை சேகரித்து வருவதாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் சிஜிதுல் ஹாசன் தெரிவித்தார். மேலும், இது பயங்கரவாதத்தின் முயற்சி எனவும் ஆனால் பொதுமக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவோர் சட்டத்திலிருந்து தப்ப முடியாது எனவும் தெரிவித்தார்.