நைஜிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் பலி

நைஜிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 22 பேர் பலி
நைஜிரியாவில் தற்கொலைப்படை தாக்குதல்: 22  பேர் பலி
Published on

ஆப்பிரிக்காவின் நைஜீரியா நாட்டில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 22  பேர் கொல்லப்பட்டனர். 

நைஜீரியா நாட்டில் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் பொதுமக்களைக் குறி வைத்து தொடர்ச்சியாகப் பல்வேறு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமானோர் இதுவரை கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில், வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் பயங்கரவாதிகள் 3 பேர் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தினர். 

இந்தக் கொடூர தாக்குதலில் பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் உட்பட அப்பாவி பொதுமக்கள் 22 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். 70-க்கும் அதிகமானோர் படுகாயம் அடைந்தனர். வடக்கு நைஜீரியாவின் மாய்துகுரி நகரில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள மீன்மார்க்கெட் பகுதியில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடந்த இடத்தில் ஏராளமான பாதுகாப்பு படை போலீசார் குவிந்திருந்தனர். போகோ ஹாரம் தீவிரவாதிகள்தான் இத்தாக்குதலை நடத்தியிருக்கக் கூடும் என்று நம்பப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு முதல் போகோ ஹாரம் பயங்கரவாதிகள் நடத்தி வரும் தாக்குதலில் இதுவரை 20 ஆயிரம் அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 26 லட்சம் பேர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். நைஜீரிய அரசு போகோ ஹாரம் பயங்கரவாதிகளை கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com