விமானத்தின் கதவு நடுவானில் பிரிந்து விழுந்த விவகாரம்.. பொறுப்பேற்ற போயிங் நிறுவனம்

அலாஸ்கா ஏர்ஸ்லைன்ஸின் விமானம் ஒன்றின் கதவு நடுவானில் பிரிந்துவிழுந்த நிகழ்வுக்கு போயிங் நிறுவனம் பொறுப்பேற்றுள்ளது.

அலாஸ்கா ஏர்லைன்ஸின் போயிங் 737 -9 மேக்ஸ் ரக விமானம் ஒன்று கடந்த வெள்ளிக்கிழமை அண்டாரியோவுகு செல்லும் வழியில் அதன் கதவு ஒன்று நடுவானில் வெடித்து பறந்தது. இதனிடையே போயிங் விமான தொழிலாளர்களின் பாதுகாப்பு கூட்டத்தில் அது தங்களுடைய தவறு என அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டேவ் கால்ஹவுன் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரத்தில் முழுமையான வெளிப்படைத்தன்மை இருக்கும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். விபத்து தொடர்பாக விசாரணை நடத்தி வரும் தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியத்துடன் இணைந்து செயல்பட உள்ளதாகவும் டேவ் கால்ஹவுன் தெரிவித்துள்ளார். முன்னதாக விமானத்தை ஆய்வு செய்த என்.டி.எஸ். பி. ஆய்வாளர்கள் விமானத்தின் கதவு சரியாக பொறுத்தப்படாமல் இருக்கலாம் என தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்த முழுத் தகவலையும் அறிந்துகொள்ள இந்த வீடியோவைப் பார்க்கவும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com