சோமாலியா மற்றும் எத்தியோப்பியாவில் இருந்து சுமார் 250 அகதிகளை ஏற்றிக் கொண்டு ஏடன் வளைகுடா வழியாக படகு ஒன்று சென்று கொண்டிருந்தது. ஏமன் கடற்கரை அருகே வந்தபோது படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சென்ற மீட்புக் குழுவினர், நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டனர்.
எனினும் இந்த விபத்தில் 6 குழந்தைகள் உள்பட 49 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. 71 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ள நிலையில், மாயமான சுமார் 140 பேரின் நிலை என்ன என்பது தெரியவில்லை. கடலில் மூழ்கி மாயமானவர்களை தேடும் பணி நடந்து வருவதாக ஐ.நா.வின் அகதிகள் பாதுகாப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.