உங்களை மரணத்திற்கு தயார்படுத்தும் ப்ளூவேலின் இலக்குகளும், விளக்கமும்!

உங்களை மரணத்திற்கு தயார்படுத்தும் ப்ளூவேலின் இலக்குகளும், விளக்கமும்!
உங்களை மரணத்திற்கு தயார்படுத்தும் ப்ளூவேலின் இலக்குகளும், விளக்கமும்!
Published on

ப்ளூவேல் மரணத்திற்கு இட்டுச்செல்லும் ஒரு இணையதள விளையாட்டு. தவறுதலாக கடற்கரையை அடையும் திமிங்கலங்கள், தனது முட்டாள்தனமான நடவடிக்கைக்காக தற்கொலை செய்து கொள்ளும் என்ற ஒரு கூற்று இருக்கிறது. இதனாலேயே இந்த மரண விளையாட்டிற்கு ப்ளூவேல் என்று பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த விளையாட்டை, நீங்கள் நினைத்தால் விளையாட முடியாது. உங்களால் இந்த விளையாட்டை எங்கிருந்தும் பதிவிறக்கம் செய்யவும் முடியாது. சிறுவர்கள் உட்பட யாராலும் இந்த மரண விளையாட்டை, ஸ்மார்ட்ஃபோன்கள் மூலம் கூகுள் ஃப்ளேஸ்டோர் அல்லது ஃபேஸ்புக் போன்ற சமூக வலைதளங்கள் மூலம் பதிவிறக்கம் செய்ய முடியாது.

இந்த விளையாட்டு ஒரு ரகசிய சமூக வலைதளக்குழுவால் மட்டுமே பகிரப்படும். விளையாட்டை உருவாக்கியவர் அல்லது நிர்வகிப்பவரிடமிருந்து அழைப்பு வந்தால் மட்டுமே உங்களால் இதை விளையாட முடியும் என்று யுனிசெஃப் கூறுகிறது. அவர்கள் எப்படி மரண விளையாட்டில் பங்கேற்பவர்களை தேர்ந்தெடுக்கிறார்கள் என்பது இன்னும் உறுதிபட தெரியவில்லை.

ப்ளூவேல் விளையாட்டின் காலம் 50 நாட்கள். சிறிய சிறிய இலக்குகளுடன் துவங்கி, கடைசியாக உங்களை ஏதாவது ஒரு விதத்தில் தற்கொலை செய்துகொள்ள தூண்டி, தற்கொலை செய்ய வைப்பதே விளையாட்டின் முடிவு.

இந்த விளையாட்டில் கொடுக்கப்படும் சில இலக்குகள்:

1. உங்கள் கைகளில் வழிகாட்டி சொல்லும் ஒரு வடிவத்தை பிளேடு வைத்துக் கீறி, அதைப் புகைப்படமெடுத்து, அனுப்ப வேண்டும்.

2. அதிகாலை 4.20-க்கு எழுந்து கொண்டு, வழிகாட்டி அனுப்பும் அசாதாரண மற்றும் பயங்கரக் காட்சிகளைக் கொண்ட வீடியோக்களைப் பார்க்க வேண்டும்.

3. ஒரு பிளேடை வைத்து உங்கள் கைகளில் மூன்று வெட்டு, வெட்டிக் கொள்ள வேண்டும். ஆழமாக அல்ல.

4. ஒரு திமிங்கலப் படத்தை பேப்பர் ஒன்றில் வரைந்து அதை வழிகாட்டிக்கு அனுப்ப வேண்டும்.

5. நீங்கள் ஒரு நீலத் திமிங்கலமாக தயார் எனில் ‘YES’ என உங்கள் காலில் பிளேடால் கீற வேண்டும், அப்படி செய்யவில்லையென்றால் அதற்கு தண்டனையாக உங்களேயே பலமுறை வெட்டிக் கொள்ள வேண்டும்.

6. ரகசிய சவால். ஒவ்வொருவருக்கும் பிரத்யேகமாக வரக் கூடியது.

7. கையில் "f40" என பிளேடால் கீறி, அதை புகைப்படம் எடுத்து அனுப்ப வேண்டும்.

8. நீங்கள் உங்கள் பயத்திலிருந்து வெளியே வர வேண்டும் என்பதற்காக சவால்கள் கொடுக்கப்படும்.

9. ஒரு நாள் முழுவதும் அதிபயங்கரமான திகில் படங்களை பார்க்க வேண்டும்.

10. அவர்கள் அனுப்பும் சில குறிப்பிட்ட பாடல்களை கேட்க வேண்டும்.

11. திமிங்கல உருவத்தை கைகளில் பிளேடால் கீற வேண்டும்.

12. உங்கள் உதடுகளை கிழித்துக் கொள்ள வேண்டும்.

13. ஒரு உயரமான கட்டடத்தின் முனைப் பகுதியில் நிற்க வேண்டும்.

14. கை அல்லது காலில் ஊசியால் பல முறை குத்த வேண்டும்.

15. பாலத்தின் மேல் முனையில் நிற்க வேண்டும்.

16. கிரேன் மேல் ஏற வேண்டும் அல்லது முயற்சிக்க வேண்டும்.

17. நீங்கள் நம்பிக்கைக்குரியவரா என்று வழிகாட்டி உங்களை சோதனை செய்வதற்காக இலக்குகள் கொடுக்கப்படும்.

18. உங்களைப் போலவே ப்ளூவேல் விளையாடும் மற்றொருவருடன் பேச வைப்பார்கள்.

20. உயரமான கட்டடத்தின் முனையில் கால்களை மடக்கி அமர வேண்டும்.

21. வழிகாட்டி உங்களது மரண தேதியை கூறுவார், அதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

22. ஒரு நாள் முழுவதும் யாருடனும் பேசக் கூடாது.

23. தினமும் காலை வழிகாட்டி சொன்ன நேரத்தில் விழிக்க வேண்டும்.

24. ஒவ்வொரு நாளும் உங்கள் உடம்பை ஒரு முறை கீறிக் கொள்ள வேண்டும்.

25. உயரமான கட்டடத்திலுருந்து குதித்து, தூக்கு மாட்டி அல்லது ஏதாவது ஒரு விதத்தில் தற்கொலை செய்ய வேண்டும்.

இதுபோன்று சிறிய கீறலில் இருந்து மரணம் வரை உங்களை கொண்டு செல்லும் இந்த மரண விளையாட்டு. விளையாடும் அனைவருக்கும் ஒரே மாதிரியான இலக்குகள் கொடுக்கப்படாது. 50 நாட்களில் 50 இலக்குகள் கொடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இந்த மரண விளையாட்டை பெரும்பாலும் 12 முதல் 19 வயது வரை உள்ள சிறுவயது இளைஞர்களே விளையாடி பலியாகின்றனர். இதிலிருந்து இளைஞர்களை பாதுகாக்க, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் அவர்களின் அன்றாட நடவடிக்கையை கவனிக்க வேண்டும். ஏதாவது மாற்றம் தென்பட்டால், உடனடியாக அவர்களுடன் பேசி மாற்ற வேண்டும் அல்லது மனநல மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண்டும்.

இந்த விளையாட்டை உருவாகியவர் மனநல மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்தவர். அவர், ரஷ்யாவில் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார். இந்த விளையாட்டை நிர்வகித்து வந்த 19 வயது இளம்பெண்ணும் இன்று கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com