சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்

சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்
சீனாவில் முதல்முறையாக மனிதருக்கு பரவிய பறவைக் காய்ச்சல்
Published on

சீனாவில் முதல்முறையாக பறவைக் காய்ச்சல் மனிதருக்கு பரவியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நான்கு வயது சிறுவனை பரிசோதித்தபோது, பறவைக்காய்ச்சல் கண்டறியப்பட்டுள்ளதாக சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எச்.3.என்.8 திரிபு, முதல் மனித நோய்த்தொற்றை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் வளர்க்கப்படும் கோழிகள் மற்றும் காகங்கள் மூலம் காய்ச்சல் பரவியுள்ளதாகவும், பெரிய அளவிலான தொற்று நோய்க்கான ஆபத்து குறைவாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பறவைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சிறுவனுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com