அமெரிக்காவில் உள்ள ஓவல் அலுவலகத்தில் பொதுமக்களிடம் உரையாற்றிய அந்நாட்டு அதிபர் ஜோ பைடன், “உலக நாடுகளின் ஒற்றுமையை அமெரிக்கா முக்கிய நோக்கமாக கொண்டிருக்கிறது. அதேநேரம் அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும். உக்ரைன் மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவை வலிமைப்படுத்த வேண்டியுள்ளது. அவை எதிர்பார்க்காத, முற்றிலும் வேறுபட்ட போரை எதிர்கொண்டிருக்கிறது.
அமெரிக்க தேசிய பாதுகாப்பும் இதில் அடங்கியிருக்கிறது. இஸ்ரேல், உக்ரைனுக்கு ராணுவ ரீதியான ஆதரவளிப்பதற்கு அதிக நிதியை வழங்க அமெரிக்க நாடாளுமன்றம் முன்வர வேண்டும். பயங்கரவாதிகளுக்கு உரிய பாடம் புகட்டத் தவறினால் நடக்கக்கூடிய பேராபத்தை அமெரிக்கா அனுபவித்திருக்கிறது. ஹமாஸ் - உக்ரைன் அத்துமீறல் மற்றும் ஆக்கிரமிப்புக்கு சர்வாதிகாரிகள் தண்டிக்கப்படாவிட்டால், அவர்கள் மேலும் அழிவையும் ஆபத்தையும் ஏற்படுத்துவார்கள்” என தெரிவித்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்புக்கு இடையேயான போரில் இதுவரை காஸாவில் 3,785 மக்கள் இறந்திருப்பதாக காஸா சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்தோரில் அதிகமானோர் பெண்கள், குழந்தைகள், முதியவர்கள். ஏறத்தாழ 12,000 மக்கள் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேலில் ஏறத்தாழ 1400 மக்கள் இறந்திருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.