ஒன்பது திரைப்படங்கள் போட்டி: ஆஸ்கரை வெல்லப்போகும் படம் எது?

ஒன்பது திரைப்படங்கள் போட்டி: ஆஸ்கரை வெல்லப்போகும் படம் எது?
ஒன்பது திரைப்படங்கள் போட்டி: ஆஸ்கரை வெல்லப்போகும் படம் எது?
Published on

ஹாலிவுட் திரையுலகின் திருவிழாவாக பார்க்கப்படும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா இந்திய நேரப்படி நாளை அதிகாலை நடைபெறுகிறது. அதில் சிறந்த படத்திற்கான பிரிவில் 9 படங்கள் போட்டியிடுகின்றன.

ஹாலிவுட்டில் வெளியான படங்களையும், கலைஞர்களையும் கவுரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது வழங்கும் விழா நடத்தப்படுகிறது. அந்த வகையில் 92வது முறையாக நடைபெறும் ஆஸ்கர் விழாவில் தி ஐரிஷ்மேன், ஃபோர்ட் வி ஃபெராரி, ஜோக்கர், 1917, ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், லிட்டில் வுமென், ஜோஜோ ராபிட், மேரேஜ் ஸ்டோரி, பாராசைட் ஆகிய 9 படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

இதில் Ford V Ferrari திரைப்படம் இரு நிறுவனங்களுக்கு இடையில் இருந்த பனிப்போரை அடிப்படையாகக் கொண்ட கதையின் பின்னணியில் எடுக்கப்பட்டிருந்தது. சிறந்த படம் மட்டுமின்றி மேலும் 3 பிரிவுகளிலும் போட்டியிடுகிறது. வாழ்ந்து முடிந்து மரணத்திற்காக காத்திருக்கும் ஹிட்மேன் வாழ்கையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட The Irishman படமும் போட்டியில் உள்ளது. இது சிறந்த படம் தவிர, ஒளிப்பதிவு, விஷூவல் எஃபெக்ட்ஸ், படத்தொகுப்பு உள்ளிட்ட 10 பிரிவுகளில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இரண்டாம் உலகப்போர்க் களத்தில் நடக்கும் நகைச்சுவை கதைக்களத்தில் வெளியான JOJO Rabbit என்ற படமும் ஆஸ்கர் போட்டியில் உள்ளது. ஒரு முயலைக்கூட கொல்ல துணியாத ஜோகோவுக்கும், ஹிட்லரின் உருவம் கொண்ட நபருக்கும் இடையே நடக்கும் கதையை மிக சுவாரஸ்யமாக படமாக்கியிருந்தனர். இந்தப் படம் மொத்தம் 6 பிரிவுகளில் களமிறங்கியுள்ளது. டிசி காமிக்ஸில் இடம்பெறும் முக்கிய வில்லன் கதாபாத்திரமான ஜோக்கரை மட்டும் எடுத்துக்கொண்டு, அவனின் கோபத்திற்கான காரணத்தை சொல்லும் வகையில் ஜோக்கர் படத்தை உருவாக்கியிருந்தார் இயக்குநர் டாட் பிலிப்ஸ். இந்த ஆண்டு ஆஸ்கர் விருது விழாவில் இந்தப் படம் மொத்தம் 11 பிரிவுகளில் போட்டியிடுகிறது.

முதல் உலகப்போர் நடந்தபோது 1600 வீரர்கள் தப்பிக்க இரு வீரர்கள் உதவினர். இந்தக் கதையை பின்புலமாகக் கொண்டு எடுக்கப்பட்ட 1917 படம் மொத்தம் 10 பிரிவுகளில் போட்டியிட்டுள்ளது. கொரிய மொழியில் வெளியான Parasite திரைப்படமும் சிறந்தப் படத்திற்கான பட்டியலில் இடம்பிடித்துள்ளது. இந்தப் படங்கள் தவிர ஒன்ஸ் அபான் எ டைம் இன் ஹாலிவுட், லிட்டில் வுமென், மேரேஜ் ஸ்டோரி ஆகிய படங்களும் போட்டியில் உள்ளன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com