ஜெர்மனியில் உள்ள வன உயிரியல் பூங்காவில் புதிதாக பிறந்த பாண்டா கரடிக் குட்டிகள், ஒன்றரை மாதத்துக்கு பின் வெளியுலகை பார்க்கத் தொடங்கியுள்ளன.
கடந்த 2017ம் ஆண்டு, சீனாவிலிருந்து கொண்டுவரப்பட்ட இரு பாண்டா கரடிகள் பெர்லின் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அதில் ஒரு பாண்டா கடந்த ஆகஸ்ட் மாதம், இரட்டை குட்டிகளை ஈன்றது. அந்த குட்டிகள் சுமார் ஒன்றரை மாதத்துக்கு பின் தற்போது கண்களை திறந்து வெளியுலகை பார்க்கத் தொடங்கியுள்ளன. இதனை பெர்லின் உயிரியல் பூங்கா அதிகாரிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.