ஒபாமா எழுதிய புத்தகம் ரூ.6,000 கோடிக்கு விற்பனை?

ஒபாமா எழுதிய புத்தகம் ரூ.6,000 கோடிக்கு விற்பனை?
Published on

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதியான ஒபாமா மற்றும் அவர் மனைவி மிச்செல் எழுதிய புத்தகங்களை, ரூ.6,000 கோடிக்கு வாங்க முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அமெரிக்க ஜனாதிபதிகள், பதவியை விட்டு விலகிய பின்னர், தனது அரசியல் அனுபவங்கள் மற்றும் நாட்டின் வளர்ச்சி பற்றிய கருத்துகளைப் புத்தகங்களாக எழுதி வெளியிடுவது வழக்கம். முன்னாள் ஜனாதிபதியான பில் கிளிண்டன் எழுதிய ‘மை லைஃப்’ என்ற புத்தகத்தின் விற்பனை உரிமையை 15 மில்லியன் டாலருக்கு அளித்தார்.

இதேபோன்று, தற்போது ஒபாமா மற்றும் அவரது மனைவியான மிச்செல் ஆகிய இருவரும் இரண்டு புத்தகங்களை எழுத உள்ளனர். இதை உலகம் முழுவதும் விற்பனை செய்யும் உரிமையை பென்குயன் ரேண்டம் ஹவுஸ் என்ற நிறுவனம் பெற்றுள்ளது. அதன் நிறுவன தலைமை அதிகாரி மார்கஸ் டோல் கூறும்போது, ஒபாமா மற்றும் அவரது மனைவியின் பேச்சு உலகத்தையே மாற்றிவிட்டது. அவர்களது புத்தகத்தை வெளியிடுவது பெருமையாக உள்ளது’ என்றார்.

இந்தப் புத்தகங்களின் தலைப்பு மற்றும் வெளியீட்டு தேதிகள் அறிவிக்கப்படவில்லை. விற்பனை உரிமையை பெறுவதற்காக ஒபாமா மற்றும் மீச்செலுக்கு ரூ.6,000 கோடி தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கு முன் ஒபாமா, ’ட்ரீம்ஸ் ‘ஃபிரம் மை ஃபாதர்’ மற்றும் ‘தி அடாசிட்டி ஆஃப் ஹோப்’ ஆகிய இரண்டு புத்தகங்களை எழுதி வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com