கலவர பூமியான வங்கதேசம்.. வன்முறையை தூண்டும் ஆளும்அரசு; மாணவர்கள் போராட்டம் ஏன்?|1947-2024 முழுவரலாறு

மாணவர் போராட்டங்கள் பல வரலாறுகளை படைத்திருக்கின்றன. மாணவர் போராட்டங்களால் உருவான நாடான பங்களாதேஷ், இப்போது கிளர்ந்துள்ள மாணவர் போராட்டத்தால் கலவரபூமியாகியிருக்கிறது.
முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
முஜிபுர் ரஹ்மான், ஹசீனாpt web
Published on

மேற்கு பாகிஸ்தான் - கிழக்கு பாகிஸ்தான்

இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, தற்போதைய பாகிஸ்தான் ஒருபுறமும், தற்போதைய வங்கதேசம் வேறுபுறமும் இருந்தாலும், இரண்டும் ஒரே நாடாக பாகிஸ்தானாக இருந்தது. அதாவது தொடர்பற்ற இரு தேசங்கள் ஒரே நாடாக இருந்தன. தற்போதைய பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான் என்றும், வங்கதேசம் கிழக்கு பாகிஸ்தான் என்றும் அழைக்கப்பட்டது. இரண்டையும் பிரித்தது இந்திய நிலப்பரப்பு.

அதுமட்டுமின்றி இரு பகுதிகளும் கலாச்சார மற்றும் மொழி ரீதியாகவும் பிரிந்தே இருந்தன. மேற்கு பாகிஸ்தானில் உருதுமொழி பேசும் மக்கள் இருந்தார்கள் என்றால், கிழக்கு பாகிஸ்தானில் வங்கமொழி பேசும் மக்கள் இருந்தார்கள். இருபகுதி மக்களும் தனித்தனியாக இருந்தாலும், அரசு மேற்கு பாகிஸ்தான் தலைவர்களிடம் இருந்தது. இரு பகுதிகளுக்கும் இடையே இருந்த பொருளாதார ஏற்றத்தாழ்வு, ராணுவ சட்டங்கள், வங்க மக்களை கீழாக நடத்தும் அணுகுமுறை போன்ற பல்வேறு காரணங்களால் இருதரப்பு தலைவர்கள் மற்றும் மக்களிடையே விரிசல் ஏற்பட்டது.

முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
மழைக்கால கூட்டத்தொடர் | 6 புதிய மசோதாக்களைத் தாக்கல் செய்யும் மத்திய அரசு!

முஜிபுர் ரஹ்மான்

இந்த எண்ணமோ 1948 ஆம் ஆண்டு முதலே கிழக்கு பாகிஸ்தான் மக்களிடம் உருவாகி இருந்தது. இத்தகைய சமயத்தில்தான் கிழக்கு பாகிஸ்தானில் அவாமி முஸ்லீம் லீக் எனும் கட்சி மௌலானா பஷானி என்பவரால் தொடங்கப்பட்டது. இந்தக் கட்சியின் மாபெரும் தலைவராக உருவெடுத்த முஜிபுர் ரஹ்மான், தனது தலைமையில் கட்சியை மிகப்பெரிதாக வளர்த்தெடுத்தார். ஆனாலும், கிழக்கு பாகிஸ்தானை தனிநாடாக உருவாக்குவதற்கு இத்தகைய வெற்றிகள் மட்டும் போதுமானதாக இல்லை. தனிநாடாக உருவாக வேண்டுமானால் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் வேண்டும்தானே. எனவே தனது கட்சியின் பெயரில் இருந்த முஸ்லீம் என்ற வார்த்தையை நீக்கினார். தேசிய அவாமி லீக் என கட்சிக்கு புதுப் பெயர் சூட்டினார். கிழக்கு பாகிஸ்தானில் ஓரளவு எண்ணிக்கையில் இருந்த முஸ்லீம் அல்லாத மக்கள் தேசிய அவாமி லீக்கில் இணைய புதுப்பாய்ச்சலுடன் பயணித்தது கட்சி.

தொடர்ச்சியாக, கிழக்கு பாகிஸ்தானில் பல்வேறு உரிமைகளைக் கோரி மக்கள் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். ஆனால் அயூப்கான் தலைமையிலான மேற்கு பாகிஸ்தான் அரசு போராட்டம் நடத்திய கிழக்கு பாகிஸ்தான் மக்கள் மீது பல்வேறு அடக்குமுறைகளை மேற்கொண்டது. ஆனாலும் போராட்டங்கள் வலுத்த வண்ணம் இருந்தன.

முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
பில்கிஸ் பானு வழக்கு|ஜாமீன் கோரிய 2 பேரின் மனு தள்ளுபடி.. உச்ச நீதிமன்றம் அதிரடி!

களத்தில் குதித்த இந்தியா

இதனிடையே, அதிபர் அயூப்கானை நீக்கிவிட்டு, ராணுவ தளபதியாக இருந்த யாகியா கான் சர்வாதிகாரி ஆனார். அடுத்தபடியாக பல்வேறு அரசியல் நெருக்கடி மற்றும் பல திருப்பங்களுக்குப் பிறகு பாகிஸ்தான் முழுவதும் 1970 டிசம்பரில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தல் முடிவில் கிழக்கு பாகிஸ்தானில் முஜிபுர் ரஹ்மானின் தேசிய அவாமி லீக் கட்சி பெரும்பான்மையாக வெற்றி பெற்றது. பாகிஸ்தான் முழுவதும் நடந்த தேர்தலில் அனைத்து கட்சிகளையும் கணக்கில் கொண்டால், முஜிபுர் ரஹ்மானின் தேசிய அவாமி லீக் கட்சி அதிக இடங்களை வென்றிருந்தது. ஆனால், முஜிபுர் ரஹ்மான் பிரதமராக பொறுப்பேற்க பல்வேறு தடைகளை ஏற்படுத்தினார் யாகியா கான்.

இதன்காரணமாக மீண்டும் கிழக்கு பாகிஸ்தானில் பல்வேறு கட்ட போராட்டங்கள் தொடங்கியது. அதனை அடக்க யாகியாகானும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டார். இதன் ஒருபகுதியாக முஜிபுர் ரஹ்மானும் கைது செய்யப்பட்டார். போராட்டமும் தீவிரமடைந்தது, அடக்குமுறையும் தீவிரமடைந்தது.

இந்நிலையில்தான் அடக்குமுறைகள் தாங்கவொண்ணாது மக்கள் இந்தியா நோக்கி வந்தனர். வந்தனர் என்றால் சாரணமாக அல்ல.. குறிப்பிட்ட காலத்திற்குள் பல லட்சக் கணக்கில் இந்திய எல்லையில் குவிந்தனர். இந்திய வங்கதேச எல்லையில் அகதிகள் குவியக் குவிய, பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்த வண்ணம் இருந்தன. இதில் வங்கதேச தேசியவாத படையான முக்தி வாகினிப் படைக்கு இந்தியா ஆதரவளிக்க, பாகிஸ்தான் இந்தியா மீது வான்வழித்தாக்குதல்கள் நடத்தியது. இதன் காரணமாக இந்தியா பாகிஸ்தான் போரும் தொடங்கியது.

முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
இங்கிலாந்தில் வெடித்த வன்முறை | தீவைத்து எரிக்கப்பட்ட பேருந்து.. போலீஸ் குவிப்பு! பின்னணி என்ன?

பிரதமரான முஜிபுர் ரஹ்மான்

இதனை அடுத்து வான் வழி, தரைவழி, கடல்வழி என மும்முனைத் தாக்குதலை இந்தியா மேற்கொண்டது. நிர்கதியாக நின்ற வங்கதேச மக்களை கொடூரமாக நடத்திய யாகியாகான் தலைமையிலான பாகிஸ்தான் படை, முழூவீச்சுடன் களமிறங்கிய இந்திய ராணுவத்தை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 16 ஆம் தேதிவரை இந்த போர் நடந்தது. முடிவில் வங்கதேசத்திலிருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் இந்திய ராணுவத்திடம் சரணடைந்தனர். விரைவில் ஷேக் முஜிபுர் ரஹ்மானும் விடுதலை செய்யப்பட்டு வங்கதேசத்தின் பிரதமராகவும் பொறுப்பேற்றார்.

சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு 30% இடஒதுக்கீடு

இந்த வரலாறு அங்கேயே இருக்கட்டும்,. இப்போது நடைமுறை சிக்கலுக்கு வருவோம். வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டு நடைமுறை என்பது 1972 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. விடுதலைப் போராட்டத்தில் பங்கெடுத்தோரின் தியாகத்தைப் போற்றும் விதமாக, அவர்களின் சந்ததிகளுக்கு வேலைவாய்ப்பில் 30 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கியது வங்கதேச அரசு.

தற்போதைய வங்கதேசத்தில், அரசியல், அரசாங்க அதிகாரிகள் என உயரடுக்குகளில் இருப்பவர்களில் பலர் பிரதமர் ஷேக் ஹசினா உட்பட, சுதந்திரப் போராட்ட காலக்கட்டத்துடன் தொடர்புடையவர்கள். அதுமட்டுமின்றி இந்த இடஒதுக்கீட்டு முறை ஆளும் அவாமி லீக் கட்சியினருக்கே சாதமகாக இருப்பதாகவும் குற்றச்சாட்டு இருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டு முறை இரண்டு அடுக்காக வங்க தேசத்தை உருவாக்குவதாகவும் எதிர்ப்பாளர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
கர்நாடகாவில் நிகழ்ந்த அதிசயம்| கொலையாளியை பிடிக்க 8 கிமீ தூரம் ஓடி மற்றொரு கொலையை தடுத்த மோப்ப நாய்!

இடஒதுக்கீட்டிற்கு எதிரான மாணவர்களின் போராட்டம்

வங்கதேசத்தில் உள்ள இடஒதுக்கீட்டு முறைப்படி, தகுதி (merit) அடிப்படையில் 44%மும், போராட்டங்களில் பங்கெடுத்துவர்களின் குடும்பத்தினருக்கு 30%மும், பின் தங்கிய மாவட்டங்களுக்கு 10%மும், பெண்களுக்கான ஒதுக்கீடாக 10%மும், சிறும்பான்மையின மக்களுக்கு 5%மும், உடல் ஊனமுற்றோருக்கான ஒதுக்கீடாக 1%மும் நடைமுறையில் இருந்தது.

எனவே, சுதந்திர போராட்டங்களில் பங்கெடுத்தவர்கள் குடும்பத்தினருக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்துவிட்டு தகுதியின் அடிப்படையில் ஆட்சேர்ப்பை நடத்த வேண்டும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். பின்னர் 2018 ல் வெடித்த மாணவர்கள் புரட்சியின் காரணமாக, இந்த குறிப்பிட்ட இட ஒதுக்கீட்டு முறை மட்டும் ரத்து செய்யப்பட்டது.

ஆனால், சுதந்திர போராட்ட வீரர்களின் குழந்தைகளுக்கான 30% இடஒதுக்கீட்டை கடந்த ஜூன் மாதம் உயர்நீதிமன்றம் மீண்டும் உறுதி செய்தது. அதுமட்டுமின்று, இடஒதுக்கீட்டு முறையை அகற்றியது அரசியலமைப்பிற்கு விரோதனமானது என்றும் தீர்ப்பளித்தது. ஜூலை 1 ஆம் தேதி வங்கதேசத்தின் புகழ்பெற்ற டாக்கா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் இடஒதுக்கீட்டிற்கு எதிராக போராட்டத்தை தொடங்கினர். இது நாளடைவில் நாட்டின் பிற பகுதிகளுக்கும் பரவியது.

முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
முடங்கிய மைக்ரோசாஃப்ட்... எல்லாத்துக்கும் காரணம் CrowdStrike... மிகப்பெரிய சிக்கலில் உலகம்..!

தொலைத்தொடர்பு சேவைகள் முடக்கம்

ஆனால், ஜூலை 10 ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த வழக்கை விசாரித்தபோது , இடஒதுக்கீட்டை ஒருமாத காலத்திற்கு நிறுத்தி வைத்தது. ஆனால் போராட்டங்கள் தொடர்ந்த வண்ணம்தான் உள்ளது. ஜூலை 15 ஆம் தேதி ஆளும் அவாமி கட்சி லீக் கட்சியின் மாணவர் அமைப்பான பங்களாதேஷ் சத்ரா லீக்கின் உறுப்பினர் டாக்கா பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து போராட்டக்காரர்களை தாக்கியதாக தகவல் வெளியானதை அடுத்து போராட்டம் வன்முறையாக மாறியது.

இது பாதுகாப்பு படையினர், அரசாங்க ஆதரவாளர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களுக்கு இடையிலான கலவரமாக மாறியுள்ளது. தலைநகர் டாக்கா மட்டுமல்ல, ராஜ்ஷாஹி, குல்னா, சட்டோக்ரம் உள்ளிட்ட ஒவ்வொரு நகருமே வன்முறைகளால் வதைபட்டு வருகின்றன.

இந்த வாரத்தில் நடந்த வன்முறையில் மட்டும் ஏறத்தாழ 39 பேர் உயிரிழந்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதில் வியாழக்கிழமை மட்டும் 28 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளிவருகின்றன. அதுமட்டுமின்றி நாடுமுழுவதும் தொலைத் தொடர்பு சேவைகள் முடக்கப்பட்டுள்ளன. அனைத்து பல்கலைக்கழகங்களும் கடந்த புதன்கிழமை அன்றே மூடப்பட்டுவிட்டன.

முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
தலையில் தாக்கிய பந்து.. சுருண்டு விழுந்த பவுலர்.. கொட்டிய ரத்தம்.. திகைத்து நின்ற வீரர்கள்! #Video

தீர்ப்பிற்காக காத்திருங்கள் - பிரதமர் ஹசீனா

இத்தகைய சூழலில் கடந்த வாரத்தில், பிரதமர் ஹசீனாவின் செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்த வார்த்தை களத்தை மேலும் சூடாக்கியது. செய்தியாளர்களிடம் பேசிய அவர், போராட்டக்காரர்களை ரசாகர்களின் சந்ததிகள் எனும் தொனியில் அவர் குறிப்பிட்டார். வங்கதேச விடுதலைப் போரின்போது பாகிஸ்தான் ராணுவத்துக்கு ஒத்துழைத்த துணை ராணுவப்படை தான் ரசாகர்கள். எனவே, ரசாகர்கள் எனும் வார்த்தை வங்கதேசத்தைப் பொருத்தவரை புண்படுத்தும் வார்த்தையாக பார்க்கப்படும். அதை மாணவர்கள் நோக்கி பயன்படுத்தியதும் மேலும் எதிர்வினைகளை ஏற்படுத்தி இருந்தது.

காவல் நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் மீதும் போராட்டக்காரர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். இதில் வங்கதேச தொலைக்காட்சியின் தலைமை அலுவலகமும் அடங்கும். அரசாங்க இணையதளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

கலவரங்களை கட்டுப்படுத்தும் விதமாக, தகவல் பரவுவதை தடுக்க, தொலைபேசி சேவைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. வெளிநாட்டு தொலைத்தொடர்பு சேவைகள், இணையவழி தொலைபேசி சேவைகளும் துண்டிக்கப்பட்டுள்ளன. பங்களாதேஷ் செய்தித்தாள்கள் கலவரம் குறித்த செய்திகளை அப்டேட் செய்யாமல் தவிர்க்கின்றன. அந்நாட்டு செய்தி தொலைக்காட்சிகளும் ஒளிபரப்பை நிறுத்தியுள்ளன. பங்களாதேஷில் வெள்ளிக்கிழமை வார இறுதிநாள் என்பதால் வழக்கமாக பரபரப்புடன் காட்சியளிக்கும் தலைநகர் டாக்கா நகர வீதிகள் வெறிச்சோடிப் போயிருக்கின்றன. ஆனால், டாக்காவில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இது புயலுக்கு முந்தைய அமைதி போல அழுத்தத்துடன் காணப்படுகிறது.

முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
இந்தியா | ‘ஒவ்வொரு நிமிடத்திற்கும் 3 சிறுமிகள் குழந்தை திருமணம் செய்ய கட்டாயப்படுத்தப்படுகிறார்கள்’

இடஒதுக்கீடு விவகாரத்தில் மாணவர்களின் கோரிக்கைகளுடன் உடன்படுவதாக ஷேக் ஹசீனா அரசு தெரிவித்தாலும், மாணவர்கள் இதில் சட்டத்திருத்தைக் கோருகின்றனர். ஏற்கனவே உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு வரும் ஆகஸ்ட் 7 ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது. இதன்காரணமாக மாணவர்கள் பொறுமையாக இருக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்புக்காக காத்திருக்க வேண்டும் என்றும் பிரதமர் ஹசீனா தெரிவித்துள்ளார்.

முஜிபுர் ரஹ்மான், ஹசீனா
உத்தரகண்ட்|கட்டுமான பணியின்போதே 2 ஆவது முறையாக இடிந்து விழுந்த பாலம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com