ஏரியில் கண்டெடுக்கப்பட்ட வங்கதேசப் பெண் பத்திரிகையாளர்? என்ன நடந்தது?

வங்கதேசத்தில் உள்ள ஏரி ஒன்றிலிருந்து 32 வயது பெண் பத்திரிகையாளரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண் பத்திரிகையாளர்
பெண் பத்திரிகையாளர்Facebook
Published on

வங்கதேசத்தில் உள்ள ஏரி ஒன்றிலிருந்து 32 வயது பெண் பத்திரிகையாளரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அண்டை நாடான வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்பினர், பொதுமக்கள் இணைந்து நடத்திய புரட்சி மிகப்பெரிய வன்முறையாக வெடித்தது. குறிப்பாக, பிரதமர் ஷேக் ஹசீனா ராஜினாமா செய்ய வேண்டும் என மாணவர்கள் மீண்டும் போராட்டம் நடத்தியது அரசையே கலங்கடித்தது.

இதனால் , அந்நாட்டின் பிரதமரே தனது பதவியை ராஜினாமா செய்து இந்தியாவில் தஞ்சம் அடைந்தார். இதனைத்தொடர்ந்து , பிரதமர் இல்லம், முக்கிய தலைவர்களின் சிலைகள் பலவற்றை போராட்டக்காரர்கள் அடித்து நொறுக்கினர்.

ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சியினரை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டது. அவாமி லீக் கட்சியினர் பலர் சிறுபான்மையினர் என்பதால் அவர்கள் மீது தாக்குதல்கள் நடத்தப்படுவது அதிகரித்துள்ளது என்று அங்கு உள்ள செய்தி நிறுவனங்கள் செய்தியினை வெளியிட்டன.

இந்நிலையில்தான், முகம்மது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைக்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர தொடர்ந்து முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும், இன்னும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி கொண்டுதான் வருகின்றன.

பெண் பத்திரிகையாளர்
டெலிகிராம் சிஇஓ கைது|போர் விமான ஒப்பந்தம் நிறுத்திவைப்பு.. பிரான்ஸுக்கு எதிராக ஆக்‌ஷனில் இறங்கிய UAE

இந்தநிலையில்தான், 32 வயது பெண் பத்திரிகையாளர் ஒருவர், ஏரி ஒன்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. சாரா ரஹனுமா என்று அடையாளம் காணப்பட்ட இப்பெண், பெங்காலி மொழி செய்தி சேனலில், எடிட்டராக பணியாற்றி வந்துள்ளார்.

இவர், கடந்த புதன்கிழமை (28.8.2024) அதிகாலை டாக்காவில் உள்ள ஹதீர்ஜீல் ஏரியில் சடலமாக மிதந்ததை வழிப்போக்கர்கள் கண்டறிந்துள்ளனர்.

இதனையடுத்து, அருகிலிருந்த மருத்துவமனைக்கு உடலை எடுத்துச் சென்றுள்ளனர். இருப்பினும், சிகிச்சை பலனின்றி அதிகாலை உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூழலில், சாரா ரஹனுமா இறப்பதற்கு முந்தைய நாள் (27.8,2024) இரவு ஃபேஸ்புக்கில் இரு பதிவுகளை இட்டுள்ளார்.

அதில், “ 'மரணத்திற்கு இணையான வாழ்க்கையை வாழ்வதை விட சாவதே மேல்,' என்றும்,

மற்றொன்றில், தனது தலையில் வங்கதேச கொடியை கட்டியபடி தனது நண்பருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “உன்னை போல் நண்பன் கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார். உன்னுடை கனவுகள் அனைத்தும் முழுமையடையும். நாம் இருவரும் சேர்ந்து நிறைய செயல்களை செய்ய திட்டமிட்டிருந்தோம். மன்னித்து விடு, ஆனால், அது நிறைவேறாது,' எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு அவரது நண்பரும், “'நான் சந்தித்ததிலேயே நீ தான் சிறந்த நண்பன். நமது உறவை முறித்து விடாதே. நீயும் எதுவும் செய்து கொள்ளாதே,” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இவர் இறப்பிற்கான காரணம் என்னவென்று தெரியவில்லை.. இருப்பினும், வங்கதேசத்தின், முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகன் சஜீப் வசேத்,

பெண் பத்திரிகையாளர்
குரங்கம்மை: “எதிர்பார்த்ததைவிட வேகமாக மாறுகிறது” கலங்கி நிற்கும் வல்லுநர்கள்

”டாக்கா நகரில் உள்ள ஹதிர்ஜீல் ஏரியில் இருந்து சாரா ரஹமுனாவின் உடல் மீட்கப்பட்டது. வங்கேதேசத்தில் கருத்துச்சுதந்திரத்தின் மீதான மற்றொரு கொடூரமான தாக்குதல் இது. ” என்று தனது சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்நிலையில், இவரது இறப்பிற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com