30 வருடங்களில் இல்லாத துயரம்.. 4.8 மில்லியன் மக்கள் பாதிப்பு.. வெள்ளத்தால் அவதியுறும் வங்கதேசம்!

கடந்த 20 வருடங்களில் இவ்வளவு தண்ணீரை பார்த்ததில்லை என தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். உலகில் காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் வங்கதேசமும் ஒன்றாக இருக்கிறது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்pt web
Published on

வங்கதேசம்

வங்கதேசத்தில் இடஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர் அமைப்புகள் நடத்திய போராட்டம் பல வாரங்களாக நீடித்தது. ஒருகட்டத்தில் போராட்டம் வன்முறையாக மாறியதில் நாடுமுழுவதும் அமைதியின்மை ஏற்பட்டது. வன்முறையில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இடஒதுக்கீட்டை குறைத்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த போதும், பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலக வேண்டும் என்று மாணவர் அமைப்புகள் மீண்டும் போராட்டத்தை நடத்தின. போராட்டம் நடத்தியவர்கள் பிரதமர் இல்லம் மற்றும் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டனர். முன்னதாகவே, நிலைமை கைமீறிச் செல்வதை உணர்ந்து, பிரதமர் பதவியில் இருந்து விலகிய ஷேக் ஹசீனா, நாட்டில் இருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்தார்.

பொருளாதார நிபுணர் முகம்மது யூனுஸ்
பொருளாதார நிபுணர் முகம்மது யூனுஸ் முகநூல்

இதனை அடுத்து வங்கதேசத்தில் இடைக்கால அரசு பொறுப்பேற்றது. மெல்ல மெல்ல அமைதி திரும்பும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வங்கதேச மக்களை மேலும் இன்னலுக்கு உள்ளாக்கும் வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
’பேட்ஸ்மேன் ரெடியாகவில்லை..’ கோவத்தில் முகத்திற்கு நேராக பந்தை எறிந்த ஷாகிப்! ஷாக்கிங் வீடியோ!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வங்கதேசம்

வங்கதேசத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வீடுகளுக்குள் முழங்கால் அளவு தண்ணீர் புகுந்துள்ளதால் படகுகள் மூலம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஃபெனி, மௌல்விபஜார், ஹபிகஞ்ச், கொமிலா, பிரமன்பரியா, காக்ஸ் பஜார், காக்ராச்சாரி, சில்ஹெட், நோகாலி, லக்ஷ்மிபூர் மற்றும் சிட்டகாங் போன்ற 11 மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

கடந்த இரு வாரங்களில் மட்டும் வெள்ளத்தினார் 42 பேர் உயிரிழந்துள்ளனர். (ஒவ்வொரு ஆங்கில ஊடகங்களும் ஒவ்வொரு எண்ணிக்கையை குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது). 4.8 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 8 லட்சத்து 87 ஆயிரத்து 629 குடும்பங்கள் இன்னும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்டுள்ளன.

பல்வேறு இடங்களில் சாலைகள், ரயில்பாதைகள் வெள்ளத்தினால் கடுமையான பாதிப்புகளைக் கண்டுள்ளதால், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வேகமாக செல்வதிலும், நிவாரணப் பணிகளை மேற்கொள்வதிலும் தொய்வு ஏற்பட்டுள்ளது. ராணுவம், கடற்படை, கடலோர காவல்படை, வங்கதேச எல்லைக் காவல்படை, தீயணைப்புப் படை, உள்ளூர் காவல்துறையினர், தன்னார்வலர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் வெள்ளம் பாதித்த பகுதிகளில் மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டம்.. ஊழியர்களுக்கு கிடைக்கும் பலன்கள் என்ன?

மீட்புப் பணிகளில் மாணவர்கள்

இதில் மாணவர்கள் மீட்புப் பணிகளில் ஈடுபடுதல், நிவாரணப் பொருட்களை விநியோகம் செய்வது, மேலாண்மைப் பணிகளை மேற்கொள்வது என மூன்று குழுக்களாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர்.

நிவாரணங்களில் பொதுமக்கள் பலரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். சிலர் உணவுப் பொருட்கள், சிலர் உடைகள், சிலர் பணமாகவும் தங்களால் இயன்றதை செய்து வருகின்றனர்.

கடந்த 20 வருடங்களில் இவ்வளவு தண்ணீரை பார்த்ததில்லை என தெரிவிக்கின்றனர் பாதிக்கப்பட்ட மக்கள். உலகில் காலநிலையால் மிகவும் பாதிக்கப்படக்கூடிய நாடுகளில் வங்கதேசமும் ஒன்றாக இருக்கிறது. நாடுமுழுவதிலும் கிட்டத்தட்ட நூற்றுக்கும் மேற்பட்ட ஆறுகள் இருக்கின்றன. கடந்த சில வருடங்களாக வங்கதேச மக்கள் அடிக்கடி வெள்ள பாதிப்புகளை எதிர்கொள்கின்றனர். இன்னும் பல ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. பெரும்பாலான பகுதிகளில் வெள்ளம் வடிந்து வருவதும் குறிப்பிடத்தக்கது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
“உழைக்காமல் தலைவரான ஒரே நபர்; அண்ணாமலைக்கு முதலீடே இந்த ரெண்டும்தான்” - வெளுத்து வாங்கிய இபிஎஸ்!

வரும் காலங்களில், வெள்ளம் வடியும் காலங்களில் தண்ணீரால் பரவும் நோய்களால் மக்கள் பாதிக்கப்படலாம், உடல்நலம் தொடர்பான பிரச்னைகள் ஏற்படலாம் என்பதால், அதை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளையும் வங்கதேச அரசு ஈடுபட்டு வருகிறது.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள்
பயிற்சி மருத்துவர் படுகொலை | 6 பேரிடம் உண்மை கண்டறியும் சோதனை.. முக்கிய ஆதாரமாக மாறிய சிசிடிவி!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com