வங்கதேசத்தின் செய்தி தொகுப்பாளரான முதல் திருநங்கை!

வங்கதேசத்தின் செய்தி தொகுப்பாளரான முதல் திருநங்கை!
வங்கதேசத்தின் செய்தி தொகுப்பாளரான முதல் திருநங்கை!
Published on

‘தடை அதை உடை, புது சரித்திரம் படை’ என்ற வரிகளுக்கு ஏற்றபடி தடைகளை உடைத்து சாதனை படைத்துள்ளார் வங்கதேச நாட்டை சேர்ந்த 29 வயதான திருநங்கை தாஷ்னுவா அனன் ஷிஷிர். கடந்த திங்களன்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட சர்வதேச மகளிர் தினத்தன்று செய்தி தொகுப்பாளராக வங்கதேச செய்தி ஊடகத்தில் செய்தி வாசித்து அசத்தியுள்ளார் அவர். 

வங்காள மொழி செய்தி தொலைக்காட்சியான போய்சாக்கி நியூஸ் சேனனில் நேரலையில் செய்தியை வாசித்துள்ளார் தாஷ்னுவா. அண்மையில் நடைபெற்ற ஆடிஷன் மூலம் தேர்வான அவர் பலகட்ட பயிற்சிக்கு பின்னர் இதனை சிறப்பாக செய்துள்ளார். இதன் மூலம் ஒரு மாற்றம் நடக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

“நிச்சயமாக இந்த சமூகம் எங்களை போன்ற மூன்றாம் பாலினத்தவர்களை பார்க்கும் கண்ணோட்டத்தை மாற்றும் என நம்புகிறேன். இது ஆரம்பம் தான். நான் வளரும்போது பாலியல் ரீதியான துன்புறுத்தல்களை சந்தித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார் அவர். 

செய்தியை வாசித்து முடித்ததும் ஆனந்தக்கண்ணீர் மல்க அழுத்துள்ளார் அவர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com