வாழைப்பழத்தைப் பார்த்தாலே பயம்.. ஊழியர்களிடம் கடும் உத்தரவு.. ஸ்வீடன் அமைச்சரின் வெளிவந்த ரகசியம்!

ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு, வாழைப்பழத்தைக் கண்டாலே பயம் வந்துவிடுகிறது.
Paulina Brandberg
Paulina Brandbergஎக்ஸ் தளம்
Published on

மனிதர்கள் சிலருக்கு, தன்னையுமறியாமல் பயம் வருவது உண்டு. அவர்கள், பெரும்பாலும் இருட்டு, கொடிய விலங்குகள். ஆயுதம் வைத்திருக்கும் நபர்கள் உள்ளிட்டவைகளைப் பார்த்தால் பயம் வந்துவிடும். இது, மருத்துவரீதியாக மனப் பதற்றம் என அறியப்படுகிறது. இந்த மனப் பதற்றம்தான், சிலருக்கு குறிப்பிட்ட சூழலில் மட்டுமே வந்துபோகிறது. ஆனால், இதுவே எல்லாச் சூழல்களிலும் நீடித்திருந்தால் அது நோயாக மாறுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில், ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த அமைச்சர் ஒருவருக்கு, வாழைப்பழத்தைக் கண்டாலே பயம் வந்துவிடுகிறது.

Paulina Brandberg
Paulina Brandberg

அந்நாட்டின் பாலின சமத்துவ அமைச்சராக இருப்பவர், பவுலினா பிராட்பெர்க் [Paulina Brandberg]. இவருக்கு வாழைப்பழங்களைக் கண்டால் பயம் ஏற்படுகிறது. இந்தக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள பவுலினா பிராட்பெர்க் தன்னுடைய அலுவலகத்தில், தான் கலந்துகொள்ளும் கூட்டங்களில் எல்லாம் வாழைப்பழங்கள் தனது கண்ணில் படவே கூடாது என உத்தரவு போட்டுள்ளார். அவருக்கும் அவருடனான ஊழியர்களுக்கும் இடையில் பரிமாறப்பட்ட இமெயிலின்போது இந்த விஷயம் வெளிவந்துள்ளது.

இதையும் படிக்க; இலங்கை நாடாளுமன்ற தேர்தல்: வரலாற்று வெற்றியைப் பதிவுசெய்த ஆளும்கட்சி.. ராஜபக்சே கட்சியுடன் ஒப்பீடு!

எஸ்பிரசென் [Expressen] செய்தி நிறுவனம் இந்த இமெயில்களை பொதுவெளியில் வெளியிட்டது. கடந்த செப்டம்பர் மாதம் தேதியிட்ட ஈமெயில் ஒன்றில், ஸ்வீடன் சபாநாயகர் அலுவலகத்தில் தான் கலந்துகொள்ள உள்ள மீட்டிங்கில் வாழைப்பழகங்கள் எதுவும் இருக்கக்கூடாது, அவை எனக்கு அதிக அலர்ஜி என்று பவுலினா தெரிவித்துள்ளார். பவுலினா கலந்துகொள்ள உள்ள மற்றொரு மீட்டிங் தொடர்பான இமெயிலில், ”நாங்கள் கான்ஃபரன்ஸ் இடத்தை முற்றிலுமாக பாதுகாப்பு செய்துவிட்டோம், எந்த வாழைப்பழங்களும் இங்கு இல்லை” என்று ஊழியர்கள் அவருக்கு தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர் கொடுத்த விளக்கத்தில், “இந்த பயம் எனது தனிப்பட்ட வாழ்வில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது” என தெரியப்படுத்தியுள்ளார்.

வாழைப்பழத்தைப் பார்த்தாலே பயம் என்பது பெரும்பாலும் குழந்தைப் பருவத்திலேயே உருவாகிறது. ஆனால் சரியான காரணங்களைக் கண்டறிவது கடினம்” என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

இதையும் படிக்க: “மதச்சார்பின்மை என்ற சொல் கூடாது” - அரசியலமைப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி சர்ச்சையில் வங்கதேசம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com