பெத்லகேமில் இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலை - காரணம் என்ன?

காஸா மீது இஸ்ரேல் நடத்தும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெத்லகேமில் பெண் ஒருவர் இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலையை வைத்தார்.
Incubator
Incubatorpt desk
Published on

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காஸாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி வருகிறது.

Incubator
Incubatorpt desk

வான் வழியாகவும், தரை வழியாகவும் நடத்தப்படும் தாக்குதலால் காஸாவில் இதுவரை குழந்தைகள், பெண்கள் உள்பட 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.

Incubator
காஸா மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல்: 20 ஆயிரத்தை தாண்டியது உயிரிழப்பு!

இந்நிலையில், காஸா மக்களுக்கு ஆதரவளிக்கும் வகையிலும், போரை நிறுத்த வலியுறுத்தியும் பாலஸ்தீனம் உள்பட பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்தை தவிர்த்தனர்.

இதில் பெத்லகேமில் பிஷாரா எனும் பெண் ஒருவர், குழந்தைகள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து கிறிஸ்துமஸ் நாளில் தேவாலயத்தின் முன்பு இன்குபேட்டரில் குழந்தை இயேசு சிலையை வைத்து கவனம் ஈர்த்தார்.

போரின் காரணமாக காஸாவில் உள்ள அல் ஷிபா மருத்துவமனையில் மருந்துகள், மின்சாரம் இல்லாததால் 8 குழந்தைகள் உயிரிழந்ததாகவும் அவர் சோகத்துடன் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com