"பீர் குடித்துவிட்டு உறங்கிய தாயால் இறந்த 4 மாத குழந்தை" வழக்கில் விநோத தீர்ப்பு..!

"பீர் குடித்துவிட்டு உறங்கிய தாயால் இறந்த 4 மாத குழந்தை" வழக்கில் விநோத தீர்ப்பு..!

"பீர் குடித்துவிட்டு உறங்கிய தாயால் இறந்த 4 மாத குழந்தை" வழக்கில் விநோத தீர்ப்பு..!
Published on

தாய் பீர் குடித்த சில மணி நேரங்களுக்கு பிறகு குழந்தை படுக்கையிலேயே உயிரிழந்தது தொடர்பான வழக்கில் இது ஒன்றும் பெரும் குற்றமில்லை என்று அமெரிக்காவின் மேரிலாண்ட் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் மேரிலாண்ட் நகரில் கடந்த 2013 ஆம் ஆண்டு மூரியல் மாரிசன் என்ற பெண் பேஸ்புக் பார்த்துக்கொண்டு இரவு பீர் அருந்தியுள்ளார். பின்பு தனது 4 மாத மகளுக்கு டயபர்களை மாற்றிவிட்டு தாய் பால் கொடுத்துவிட்டு குழந்தையின் அருகிலேயே தூங்கிவிட்டார். பின்பு காலையில் கண் விழித்து பார்த்தபோது தன்னுடைய மகள் பேச்சு மூச்சில்லாமல் உதட்டில் நீலம் படிந்து உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளது.

இதில் குற்றஞ்சாட்டப்பட்ட மூரியல் மாரிசன் மீது குழந்தையின் அருகிலேயே மூச்சு முட்ட அளவுக்கு உறங்கியதன் காரணமாகவே குழந்தை உயிரிழந்துள்ளது. இதற்கு மூரியல் மாரிசனே காரணம் எனக் கூறி அவருக்கு 20 ஆண்டுகளை சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்து. இதனையடுத்து தன்னுடய தண்டனையை குறைக்க வேண்டும் என்றும் விடுதலை செய்ய வேண்டுமென்றும் தொடர்ந்து மேல்முறையீடு செய்து வந்தார் மூரியல் மாரிசன்.

இதனையடுத்து இந்த வழக்கை விசாரித்த மேரிலாண்ட் நீதிமன்ற நீதிபதிகள், இது அஜாக்கரதை காரணமாக மரணம் நிகழ்ந்ததாகவே பார்க்கப்பட வேண்டும். திட்டமிட்டு ஒரு தாய் குழந்தையை கொலை செய்யவில்லை. மேலும் குழந்தையுடன் தாய் உறங்குவது ஒன்றும் கொலைக் குற்றமல்ல என தெரிவித்துள்ளனர். மேலும் ஒரு பீர் குடித்துவிட்டு 4 மாத குழந்தையின் அருகில் தூங்குவதன் மூலம் குழந்தையை சாகடிக்க முடியாது என கூறி மூரியல் மாரிசனை விடுதலை செய்தனர்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com