மூளைச்சாவு அடைந்த கர்ப்பிணிக்கு 117 நாட்களுக்கு பிறகு குழந்தை பிறந்துள்ளது.
செக் குடியரசைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் ஒருவர் கடந்த ஏப்ரல் மாதம் வாதத்தால் பாதிக்கப்பட்டார். உடனாடியாக அவரை ஹெலிகாப்டர் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் நரம்புமண்டலத்தில் அவருக்கு பாதிப்பு அதிகமாக இருந்ததால் அவர் மூளைச்சாவு அடைந்தார். அவரது வயிற்றில் இருக்கும் குழந்தையை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று திட்டமிட்ட மருத்துவர்கள் உயிர்க் காக்கும் கருவிகளை பொறுத்தி அவரைக் காப்பாற்றி வந்தனர்.
இந்நிலையில் கடந்த மாதம் 15ம் தேதி அறுவைச் சிகிச்சை மூலம் அவருக்கு குழந்தை பிறந்தது. 2.13 கிலோவில் குழந்தை ஆரோக்யமாக பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மூளைச்சாவு அடைந்த பெண்ணிற்கு 3 மாதங்களுக்கு மேலாக உயிர் வாழ்வதற்கான சிகிச்சையை ஏற்படுத்தி குழந்தையை மருத்துவர்கள் காப்பாற்றியுள்ளனர்.
இது நிச்சயம் மருத்துவத்துறையின் சாதனைதான் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். தாயின் உயிரைக் காப்பாற்றுவது கடினம் என்பதால் குழந்தை பிறந்தவுடன் உயிர்க்காக்கும் கருவிகள் நீக்கப்பட்டன.