சவால் நிறைந்த பிரதே பரிசோதனை செய்யும் வேலையை கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக செய்து வந்த அமெரிக்காவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு நடந்த நிகழ்வு அவரை கதிகலங்க செய்திருக்கிறது.
அமெரிக்காவின் மேரிலாண்ட் பகுதியைச் சேர்ந்த ஜெசிக்கா லோகன் என்ற 31 வயது பெண், பிரேத பரிசோதனை வேலையை விரும்பியே செய்வதாக கூறியிருக்கிறார். ஏனெனில் இந்த வேலை எப்போதும் வித்தியாசமானதாகவே இருக்கும் என்பதால் என்னை கவர்ந்துவிட்டது என ஜெசிக்கா கூறியிருக்கிறார்.
இப்படி இருக்கையில், தனக்கு நிகழ்ந்த ஒரு கொடூரமான அனுபவத்தை பகிர்ந்திருக்கிறார் ஜெசிக்கா. அதன்படி, இறந்த நபரின் உடலில் உயிரோடு இருக்கும் பாம்பை கண்டறிந்திருக்கிறார் ஜெசிக்கா. LADbible செய்தியின் படி, சடலத்தின் உடலில் பாம்பை கண்டதும் பதறியடித்து அந்த அறையை விட்டு வெளியேறி, அந்த பாம்பை பிடித்த பிறகே வருவேன் எனக் கூறியிருக்கிறார் ஜெசிக்கா.
சடலத்துக்குள் எப்படி பாம்பு வந்தது?
இறந்த அந்த நபரின் உடல் ஒரு ஓடையில் இருந்து கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இறந்த பிறகு அந்த உடலுக்குள் பாம்பு புகுந்திருக்கும். இது இறந்த உடல் இருக்கும் சூழலை பொறுத்தது. பொதுவாக உடல்கள் சூடாகவும் ஈரமாகவும் இருந்தால் பூச்சிகள் ஊர்வதற்கான சாத்தியக் கூறுகள் இருக்கும். ஆனால் குளிர்ச்சியான வறண்ட சடலத்தில் அப்படி இருக்காது. இப்படியான சூழலில்தான் அந்த சடலம் ஓடையில் இருந்து கொண்டு வரப்பட்டிருக்கிறது.
அதனை பிரேத பரிசோதனை செய்யும் போதுதான் அந்த இறந்த நபரின் அழுகிய உடலின் தொடையில் இருந்து உயிரோடு பாம்பு இருந்திருக்கிறது. இதுப்போன்று நிகழ்வுகளெல்லாம் ஏற்படும் என்பதால்தன குளிர் காலத்தில் சிதைந்த உடலை பரிசோதனை செய்வேன் என ஜெசிக்கா விளக்கம் கொடுத்திருக்கிறார்.