காட்டுத்தீ பிரச்னையை முறையாக கையாளவில்லை என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவில் நியூசவுத் வேல்ஸ், விக்டோரியா மாகாணங்களில் கடந்த சில மாதங்களாகவே காட்டுத்தீ பரவி வருகிறது. லட்சக்கணக்கான வனப்பகுதி தீக்கிரையாகியுள்ளது. 28 பேர் காட்டுத்தீயால் உயிரிழந்துள்ள நிலையில், ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்துள்ளன. காட்டுத்தீ பிரச்னையை அரசு முறையாக கையாளவில்லை என பிரதமர் ஸ்காட் மாரிசன் மீது விமர்சனங்கள் உள்ளன.
ஏற்கெனவே அவர் ஹவாய்க்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றதும் விமர்சனத்துக்குள்ளானது. இந்த நிலையில் காட்டுத்தீ பிரச்னையை முறையாக கையாளவில்லை என ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்காட் மாரிசன் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்த பிரச்னையை இன்னும் முறையாக கையாண்டிருக்கலாம் என ஸ்காட் மாரிசன் விமர்சனங்களை ஏற்றுக் கொண்டிருக்கிறார்