ஆப்கான் ராணுவம் குண்டு வீச்சு: மசூதியில் 70 பேர் உடல் சிதறி பலி

ஆப்கான் ராணுவம் குண்டு வீச்சு: மசூதியில் 70 பேர் உடல் சிதறி பலி
ஆப்கான் ராணுவம் குண்டு வீச்சு: மசூதியில் 70 பேர் உடல் சிதறி பலி
Published on

தலிபான் தீவிரவாதிகளை குறிவைத்து ஆப்கானிஸ்தான் ராணுவம் நடத்திய விமான தாக்குதலில் 70 பேர் பலியாயினர்.

ஆப்கானிஸ்தானில் குண்டூஷ் மாகாணத்தில் தஷ்ட்-இ-ஆர்சி மாவட்டம் தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. அங்கு தலிபான் அமைப்பின் உறுப்பினர்கள் ஒரு மசூதியில் நேற்று கூடுவதாக ராணுவத்துக்கு தெரிய வந்தது. இதையடுத்து அவர்களை குறி வைத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் குண்டுவீசி தாக்கின. ஆனால், குறி தவறி மசூதியை ஒட்டியுள்ள மதப் பள்ளி மீது குண்டுகள் விழுந்ததால் பள்ளி கட்டிடமும், மசூதியின் ஒரு பகுதியும் இடிந்தன. 

குண்டுவீச்சு நடந்தபோது பள்ளியில் பட்டமளிப்பு விழா நடந்தது. மாணவர்கள் மட்டுமின்றி பெற்றோரும் கலந்து கொண்டனர். அதனால் இடிபாடுகளில் சிக்கி 70 பேர் பலியாயினர். இவர்களில் தீவிரவாதிகளும் அடங்குவர். 

ஆனால் தலிபான் தீவிரவாதிகளின் செய்தி தொடர்பாளர் 150 பேர் பலியானதாகவும் அவர்கள் அனைவரும் பொதுமக்கள் என்றும் தெரிவித்துள்ளார். 25 தீவிரவாதிகள் பலியானதாக அரசு தெரிவித்துள்ளது. காயம் அடைந்த 50 பேர் மருத்துவம னையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுவதாக டாக்டர்கள் கூறியுள்ளனர். 

இதற்கிடையே இந்த குண்டு வீச்சுக்கு ஆப்கானிஸ்தான் முன்னாள் பிரதமர் ஹமீது கர்ஸா கண்டனம் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com