இஸ்ரேலில் மதவிழாவின் போது பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டு 44 பேர் உயிரிழந்தனர்.
மவுண்ட் மீரானில் நடைபெற்ற திருவிழாவில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கேற்றனர். குறுகிய இடத்தில் பலர் ஒன்று திரண்டதால் கூட்டநெரிசல் ஏற்பட்டது. நெரிசல் தாங்காமல் ஒருவர் மீது ஒருவர் விழுந்ததாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இதுவரை 44 பேரின் உடல்கள் கைப்பற்றப்பட்டுள்ள நிலையில் 100 க்கும் அதிகமானவர்கள் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது மிகப்பெரிய துயரம் என தெரிவித்துள்ள பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, காயமடைந்தவர்கள் குணமடைய பிரார்த்தனை செய்வதாகக் கூறியுள்ளார். இஸ்ரேலில் கொரோனா கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பிறகு நடைபெற்ற முதல் மதவிழா இது.