Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி

Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி
Galaxy-ல் இருந்து மீண்டும் ரேடியோ சிக்னல்: விண்மீனில் நடப்பது என்ன? விஞ்ஞானிகள் அதிர்ச்சி
Published on

பூமிக்கு அப்பால் கிரகங்களுக்கிடையேயான உள்ள உயிர்களுக்கான தேடல் ஆய்வுக்குப் பின்னால் உள்ள மிகப்பெரிய சக்தியாக இருந்து வருகிறது. அது தொடர்பான ஆராய்ச்சி முடிவுகளும், புது புது கண்டுபிடிப்புகளும் சுவாரஸ்யத்தையும் ஆச்சர்யத்தையும் அதே சமயத்தில் சற்று கிலியையும் ஏற்படுத்துகிறது.

அந்த வகையில், விண்மீன் மண்டலத்தில் 3 பில்லியன் ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்து ரேடியோ சிக்னல் ஒன்றை கண்டுபிடித்துள்ளதாக வானியல் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அறிவியல் சார்ந்த பிரபல இதழான Nature Journal இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ளது. அதில், FRB (Fast Radio Burst) என்ற சிக்னல் கேலக்ஸியில் இருந்து பூமிக்கு வருவது இரண்டாவது முறையாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், இதனை FRB 20190550B என விஞ்ஞானிகள் அழைக்கிறார்கள் எனவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

முன்னதாக 2019ம் ஆண்டு மே மாதம் கிடைத்த சிக்னலை சீனாவில் குய்சோவில் ஸ்பெரிகல் டெலஸ்கோப் மூலம் விஞ்ஞானிகள் பின்தொடர்ந்தனர். அதன் பிறகு 2020 ஏப்ரல் மற்றும் செப்டம்பர் மாதங்களுக்கு இடையே இந்த சிக்னலில் இருந்து 75 FRB வந்ததாக கண்டறியப்பட்டுள்ளது.

FRB 20190550B-ம் FRB12110-ல் இருந்து வந்த சிக்னலுக்கும் ஒற்றுமை இருப்பதாகவும் கூறியுள்ள விஞ்ஞானிகள் இது எதனால் நிலவுகிறது என்ற ஆராய்ச்சி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் இந்த சிக்னல் நியூட்ரான் நட்சத்திரத்தை வெளியிட்ட சூப்பர்நோவா வெடிப்பால் வெளியேற்றப்பட்ட அடர்த்தியான பொருட்களில் இருந்தும் வந்திருக்கலாம் என யூகிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ: 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com