புகழ்பெற்ற விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தனது 3-வது விண்வெளி பயணத்திற்கு தயாராகி வருகிறார். இவரும் விண்வெளி வீரர் புட்ச் வில்மோரும் யுனைடெட் லாஞ்ச் அலையன்ஸ் அட்லஸ் V(five) ராக்கெட்டில் போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏறிச் சென்று, சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒரு வார காலம் தங்குவார்கள் என்று நாசா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
போயிங் ஸ்டார்லைனர் விண்கலத்தில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பரிசோதனை பயணத்தில் முதல் பைலட்களில் ஒருவராக சுனிதா பயிற்சி பெற்று வருகிறார். மேலும் இந்த பயணத்தை வரும் மே 6-ஆம் தேதி திங்கட்கிழமை இரவு 10.34 மணிக்கு ஏவ திட்டமிடப்பட்டுள்ளது.
விண்வெளியில் அதிக முறை நடந்த பெண் என்ற சாதனைக்கு சொந்தக்காரரான சுனிதா, 321 நாட்கள் விண்ணில் கழித்துள்ளார்என்பது குறிப்பிடத்தக்கது.