சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் ஒன்று பூமியை தாக்கிய நிகழ்வு போன்றே, நிலவிலும் சிறுகோள் மோதியதற்கான ஆதாரங்களை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
நிலவில் ஆய்வு மேற்கொள்வதற்காக 2020இல் 'சாங்கே-5' என்ற விண்கலத்தை அனுப்பியது சீனா. வெற்றிகரமாக தரையிறங்கிய அந்த விண்கலம் நிலவின் பாறைத் துகள்களையும் பூமிக்கு எடுத்து வந்தது. அந்த பாறைத்துகள் மாதிரியை சீன விஞ்ஞானிகள் ஆய்வு செய்து, அதன் முடிவுகளை ‘சயின்ஸ் அட்வான்சஸ்’ இதழில் வெளியிட்டனர். அதன்படி, சந்திரனின் நிலப்பரப்பில் தண்ணீர் இருப்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
'சாங்கே-5' விண்கலம் சேகரித்த நிலவின் பாறைத் துகள் மாதிரிகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுசெய்து வந்த நிலையில், மிக முக்கியமான ஆய்வு முடிவு ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதன்படி பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு சிறுகோள் ஒன்று பூமியை தாக்கிய நிகழ்வு போன்றே, நிலவிலும் சிறுகோள் மோதியதற்கான ஆதாரங்களை சீன விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
சுமார் 66 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, சிறுகோள் ஒன்று பூமியில் மோதியபோது டைனோசர்கள் பூண்டோடு அழிந்ததாக விண்வெளி ஆராய்ச்சியாளர்கள், தொல்பொருள் நிபுணர்கள் நம்புகிறார்கள். இந்தநிலையில் நிலவில் சிறுகோள் மோதியதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளது நிலவு ஆராய்ச்சியில் பெரிய மைல்கல்லாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிக்க: மாமிசம் சாப்பிடும் ஆண்களுடன் 'செக்ஸ் ஸ்டிரைக்' செய்யுங்கள்: பெண்களுக்கு PETA கூறியது என்ன?