சர்வதேச அளவில் பயங்கரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்ட லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்றவை தனது மண்ணில் இருந்து செயல்பட்டது உண்மைதான் என பாகிஸ்தான் ஒப்புக் கொண்டுள்ளது.
பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக பாகிஸ்தான் செயல்படுவதாக பல்வேறு சர்வதேச அமைப்புகளின் கூட்டங்களில் இந்தியா தொடர்ந்து குற்றம்சாட்டி வரும் நிலையில், அதை மறுத்து வந்த பாகிஸ்தான், பயங்கரவாதத்துக்கு இடமளித்ததை முதல்முறையாக ஒப்புக் கொண்டிருக்கிறது.
ஜியோ நியூஸ் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் கவாஜா ஆசிஃப் இதைத் தெரிவித்தார். இந்த அமைப்புகள் மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிப்பதன் மூலம் பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை எடுப்பதை சர்வதேச சமூகத்துக்கு பாகிஸ்தான் தெரிவிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.