அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய   விருது

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது

அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருது
Published on

ஹாலிவுட் நடிகரும், முன்னாள் கலிபோர்னியா மாகாண கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டு அரசின் உயரிய கவுரவ விருது வழங்கியுள்ளது.

ஹாலிவுட் நடிகரும், அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தின் முன்னாள் கவர்னருமான அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கருக்கு பிரான்ஸ் நாட்டு அரசின் உயரிய கவுரவ விருது வழங்கியுள்ளது. சுற்றுச்சூழலை பாதுகாப்புக்காக தனது தொண்டு நிறுவனம் மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் அர்னால்டின் சேவையை பாராட்டும் விதமாக ஃபிரான்ஸ் நாட்டு அதிபர் பிராங்கோயில் ஹாலண்டே இந்த கவுரவ விருதை வழங்கினார்

விருதைப் பெற்றுக்கொண்ட அர்னால்ட் கூறியதாவது, மாசு, சுகாதாரமின்மை காரணமாக ஒவ்வொறு ஆண்டும் 7 மில்லியன் மக்கள் மரணமடைகின்றனர், அதனால் மாசு மற்றும் கிரீன்ஹவுஸ் வாயுக்களை குறைக்க வேண்டும். இந்த பிரச்னைக்கு காரணம் மனிதர்கள், ஆதலால் நாம் தான் அதை சரி செய்ய வேண்டும். யார் தலைவன், யார் ஜனாதிபதி, யார் நாட்டை வழி நடத்துகிறார் என்பது முக்கியமல்ல, நாம் வெற்றியை நோக்கி முன்னேறி சென்று கொண்டே இருக்க வேண்டும்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com