Alarm On... இஸ்ரேல் மக்களுக்கு எச்சரிக்கை கொடுத்த ராணுவம்
இஸ்ரேல் ராணுவம், ஹமாஸ் ஆயுதக்குழுவினர் இடையே 9வது நாளாக போர் நீடித்து வரும் சூழலில், மக்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி தஞ்சம் அடைந்துள்ளனர். எந்த நேரம் வேண்டுமானாலும் ஏவுகணை தாக்குதல் நடத்தக்கூடுமென என்ற அச்சத்தில் உள்ள மக்கள், வீடுகளை விட்டு வெளியேற தயக்கம் காட்டி வருகின்றனர்.
டெல் அவிவ் நகரில் உள்ள வணிக வளாகங்கள், கடைகளும் மூடப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் ஏதும் வாங்க முடியாமல் திணறி வருகின்றனர். அத்துடன் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க தீவிர கண்காணிப்பு பணியில் இஸ்ரேல் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். ஏவுகணை தாக்குதலுக்கான எச்சரிக்கை அலாரமும் அவ்வப்போது ஒலிக்கப்படுவதால், இஸ்ரேலில் உள்ள பெரும்பாலான நகரங்களில் தொடர் பதற்றம் காணப்படுகிறது.
இந்நிலையில் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படி ராணுவம் எச்சரிக்கைவிடுத்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை பாதுகாப்பான இடங்களைவிட்டு வெளியே வர வேண்டாம் என்றும் ஹமாஸ் படையினர் ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தக்கூடுமென இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.