ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் இடையிலான மோதல் நீடிக்கும் நிலையில், ஆர்மீனியா வீரர்கள் 2,300 பேரை கொன்றதாக அஜர்பைஜான் ராணுவம் தெரிவித்துள்ளது.
நாகோர்னோ - கராபாக் பிராந்தியம் தங்களுக்கே சொந்தம் எனக் கூறி இருநாடுகளும் அவ்வப்போது சண்டையிட்டு வருகின்றன. ஆனால் கடந்த ஞாயிற்றுகிழமை முதல் இந்த பகுதியில் மோதல் வலுத்துள்ளது. அஜர்பைஜானின் ராணுவ ஹெலிகாப்டர்கள் மற்றும் வாகனங்களை ஆர்மீனியா சுட்டு வீழ்த்தியுள்ளது.
இந்த நிலையில் ஆர்மீனியா வீரர்கள் 2,300 பேரை கொன்று குவித்ததாக அஜர்பைஜான் ராணுவம் தெரிவித்துள்ளது. முக்கியமான எண்ணெய் குழாய்கள் செல்லும் பகுதியில் மோதல் நடைபெறுவதால் உடனடியாக அமைதியை நிலைநாட்ட சர்வதேச நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இரு நாட்டுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா முன்வந்துள்ள நிலையில் அஜர்பைஜான் அதனை ஏற்க மறுத்துள்ளதாக தெரிகிறது.