உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் வெற்றிபெற்று நாடு திரும்பிய அர்ஜென்டினா வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
கத்தார் உலகக் கோப்பை கால்பந்து தொடரில் அர்ஜென்டினா அணி முதலிடம் பிடித்தது. இதையடுத்து அந்த நாடே உற்சாகத்தில் மூழ்கியது. நேற்று அர்ஜென்டினா அணி வீரர்கள் வெற்றிக் கோப்பையுடன் நாடு திரும்பினர், இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக அதிபர் ஆல்பர்டோ பெர்னாண்டஸ் செவ்வாய்க்கிழமை தேசிய விடுமுறை அறிவித்தார்,
கத்தார் உலகக் கோப்பையுடன் அர்ஜென்டினா வரும் வீரர்களை வரவேற்க பிற்பகல் முதலே பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்திலும் ஏஎப்ஏ தலைமையகத்திற்கு வெளியேயும் அணியினரை பார்த்து உற்சாகப்படுத்த வேண்டும என்ற முனைப்பில் ரசிகர்கள் குவியத் தொடங்கினர். இதையடுத்து உலகக் கோப்பையுடன் வந்த வீரர்கள் விமான நிலையத்தில் இருந்து திறந்த பேருந்தின் மேல் நின்றவாறு ரசிகர்கள் முன்பு அணிவகுப்பு பேரணி நடத்தினர்.
அப்போது ரசிகர்களின் வெள்ளத்தில் மிதந்தபடி பேருந்த சென்று கொண்டிந்த போது மேம்பாலத்தின் மீது நின்றிருந்த ரசிகர் ஒருவர் உற்சாக மிகுதியில் வீரர்கள் வந்த பேருந்திற்குள் குதித்தார். இதையடுத்து இரண்டாவதாக இன்னொரு ரசிகர் அவரைப் பின்தொடர்ந்து பேருந்தில் குதிக்க முயன்றார், அப்போது லியோனல் மெஸ்ஸி மீது விழுவதை தவிர்க்க முயன்ற அவர், பேருந்தை தவறவிட்டு பின்னோக்கி கீழே விழுந்தார்.
1986 ஆம் ஆண்டுக்குப் பிறகு அர்ஜென்டினா அணி கத்தார் உலகக் கோப்பையை வென்றுள்ளது. இந்த வெற்றியைக் கொண்டாடுவதற்காக ரசிகர்கள் தெருக்களில் திரண்டதால் கோப்பையுடன் அர்ஜென்டினா வீரர்கள் சென்ற பேருந்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து 'கூட்டத்திற்கு நடுவில் பேருந்தில் தொடர்ந்து செல்ல முடியாது என்பதால் கத்தார் வெற்றியைக் கொண்டாட பியூனஸ் அயர்ஸ் நகரில் திரண்டிருந்த ரசிகர்கள் கூட்டத்தின் மீது வீரர்கள் ஹெலிகாப்டரில் பறந்து விழாவை முடித்துக் கொண்டனர்.
அளவுக்கு அதிகமாக சுமார் 4 மில்லியன் அளவுக்கு தெருக்களில் ரசிகர்கள் குவிந்ததால் திட்டமிட்டபடி மத்திய ஒபெலிஸ்கோ நினைவுச் சின்னத்தை வீரர்கள் அடைய முடியவில்லை என்பதை அர்ஜென்டினா கால்பந்து சங்கத்தின் (ஏஎப்ஏ) தலைவர் உறுதிப்படுத்தினார்.
'எங்களை அழைத்துச் சென்ற பாதுகாப்பு அதிகாரிகள் எங்களை முன்னேற அனுமதிக்க மாட்டார்கள் என்பதால் அனைத்து சாம்பியன் வீரர்களின் சார்பாக ஆயிரம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என ஏஎப்ஏ பியூனஸ் அயர்ஸ் விமான நிலையத்திற்கும், ஏஎப்ஏ தலைமையகத்திற்கு வெளியேயும் அணியைப் பார்ப்பார்கள் என்ற நம்பிக்கையில் வரத் தொடங்கினர் என ஏஎப்ஏ தலைவர், Chiqui Tapia ட்வீட் செய்துள்ளார்.