ஐபோன் பேட்டரி திறன் மற்றும் சாப்ட்வேர் அப்டேட் மூலம் பழைய மாடல் போனின் செயல்திறனைக் குறைத்த குற்றச்சாட்டில் பயனர்களை தவறாக வழிநடத்தியமைக்காக முப்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்க ஒழுங்குமுறை ஆணையர்கள் தொடர்ந்த வழக்கில் ஆப்பிள் நிறுவனம் பாதிக்கப்பட்டவர்களுக்கு 113 மில்லியன் அமெரிக்க டாலர்களை செலுத்த வேண்டும் என தீர்ப்பு வந்துள்ளது.
ஆப்பிள் அறிமுகம் செய்த புதிய அம்சத்தினால் பழைய மாடல் ஐபோன்களின் பேட்டரியில் தானாகவே சார்ஜ் டவுனாகி, போன் ஸ்விட்ச் ஆஃப் ஆகியுள்ளது. அதை தவிர்க்க புதிய அப்டேட்களை கொண்டு வந்ததால் போனின் இயக்க வேகம் குறைந்ததாக குற்றம் சாட்டியுள்ளனர் பாதிக்கப்பட்டவர்கள்.
இருப்பினும் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளது ஆப்பிள். அதே நேரத்தில் கடந்த 2018 இல் பேட்டரி தொடர்பான சிக்கல்களை தவிர்ப்பதற்காக சில மாடல்களில் போனின் இயக்க வேகம் உள்நோக்கத்துடன் குறைக்கப்பட்டதாக ஆப்பிள் உறுதி செய்தது. அப்போது பயனர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க குறைந்த விலையில் பழைய மாடல் போன்களின் பேட்டரியை அப்கிரேட் செய்து கொடுத்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரத்தில் கலிபோர்னியா நீதிமன்றம் விரைவாக செயல்பட்டு செட்டில்மென்ட் தொகை குறித்த இறுதி தீர்ப்பை கொடுக்க வேண்டும் என பழைய மாடல் ஐபோன் பயனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.