அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து பேசியுள்ளார்.
அமெரிக்காவின் சக்திமிகுந்த தலைவர்களில் ஒருவரான பிளிங்கன், 2 நாள் பயணமாக நேற்று இந்தியா வந்தார். டெல்லி சவுத் பிளாக்கில் இன்று காலை இந்திய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை சந்தித்து அவர் ஆலோசனை செய்தார். பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோரையும் இன்று அவர் சந்திக்கவுள்ளார்.
கொரோனா பெருந்தொற்றின் பாதிப்பு தொடரும் நிலையில், மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், இந்தோ - பசிபிக் ஒப்பந்தம் குறித்தும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்படும் என தெரிகிறது.