அமெரிக்க அதிபர் தேர்தல்| வேட்பாளர் மாற்றமா? ஜோ பைடன் சொன்ன திட்டவட்டமான பதில்!

அமெரிக்க அதிபர் தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
அதிபர் ஜோ பைடன்
அதிபர் ஜோ பைடன்முகநூல்
Published on

அமெரிக்காவில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்நாட்டில் ஜனநாயக மற்றும் குடியரசு ஆகிய கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. இதில், ஜனநாயக கட்சி சார்பில் ஜோ பைடன் தற்போது அமெரிக்க அதிபராக உள்ளார். இவருடைய பதவிக்காலம் இந்த ஆண்டுடன் முடியவுள்ளதால், வரும் நவம்பர் மாதம் 5ஆம் தேதி அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த வகையில் அவரை எதிர்த்து, குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு ட்ரம்ப், மீண்டும் களத்தில் உள்ளார்.

இதனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் இருவரும் மீண்டும் நேருக்குநேர் போட்டியிடுவதால், பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் உள்ளது. இந்தத் தேர்தலின் முக்கிய அம்சமாக, வேட்பாளர்கள் பல்வேறு கட்டங்களில் நேருக்குநேர் விவாதிப்பது வழக்கம். அந்த வகையில் முதலாவது நேரடி விவாத நிகழ்ச்சி கடந்த ஜூன் 27ஆம் தேதி நடைபெற்றது.

இதையும் படிக்க: ஐபிஎல்லில் விரக்தி.. டி20-ல் வெற்றி.. வான்கடே மைதானத்தில் விண்ணைப் பிளந்த ‘ஹர்திக் பாண்டியா’ கோஷம்!

அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க தேர்தலில் ட்விஸ்ட்| ஜோ பைடன் மாற்றமா? கருத்துக்கணிப்பில் ட்ரம்பை முந்திய கமலா ஹாரீஸ்!

இந்நிகழ்வில் ஜோ பைடனும், டொனால்டு ட்ரம்பும் நேருக்குநேர் சந்தித்து விவாத்தினர். ட்ரம்புடன் நடந்த இந்த விவாதத்தின்போது, ஜோ பைடன் பேச்சில் பலமுறை தடுமாற்றம் ஏற்பட்டது. அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பைடனின் வயது ஏற்கெனவே பேசுபொருளான நிலையில், அவருடைய தடுமாற்றப் பேச்சும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அவருக்குப் பதில் வேறு வேட்பாளரை களத்தில் இறக்கலாமா என அவரது கட்சியின் மூத்த நிர்வாகிகள் பரிசீலனை செய்துவருகின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது. மீண்டும் அதிபராகும் முயற்சியை கைவிடுமாறு பைடனை வலியுறுத்த 25 ஜனநாயக எம்பிக்கள் தயாராக இருப்பதாகக் கூறப்படுகிறது. பைடனுக்குப் பதிலாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிட்செல் ஒபாமா அதிபர் வேட்பாளராக களமிறக்கப்படலாம் எனத் தகவல் வெளியானது.

ஆனால் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில், ராய்ட்டர்ஸ்/இப்சோஸ் நடத்திய கருத்துக்கணிப்பில், தற்போது அமெரிக்காவின் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸுக்கு அதிபர் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அதிபர் தேர்தலில் ட்ரம்புக்கு எதிராக, கமலா ஹாரிஸ் வேட்பாளராக நிறுத்தப்படலாம் எனச் சொல்லப்படுகிறது.

இதையும் படிக்க: ‘ஓய்வில்லாத உழைப்பால் ஏற்பட்ட மன உளைச்சல்’ - வாழ்வை முடித்துக் கொண்ட ரோபோ! துயரத்தில் தென்கொரியா!

அதிபர் ஜோ பைடன்
அமெரிக்க அதிபர் தேர்தல்| ஜோ பைடனை மாற்றும் கட்சி? களமிறங்கும் ஒபாமா மனைவி!

இந்த நிலையில், அதிபர் தேர்தலில் இருந்து விலக மாட்டேன் என்று ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “நான் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர். யாரும் என்னை வெளியே தள்ளவில்லை. நான் வெளியேறவில்லை, நான் இறுதிவரை இந்த போட்டியில் இருக்கிறேன். இந்த தேர்தலில் நாங்கள் வெற்றிபெறப் போகிறோம். நவம்பரில் டொனால்ட் ட்ரம்பை தோற்கடிக்க எனக்கும், துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு உதவுங்கள். நீங்கள் எத்தனை முறை வீழ்த்தப்படுகிறீர்கள் என்பது முக்கியமல்ல. நீங்கள் எவ்வளவு விரைவாக எழுந்திருக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம்.

ஜோ பைடன்
ஜோ பைடன்எக்ஸ் தளம்

ஒரு நாடாக, நாம் வீழ்த்தப்படும்போது, மீண்டும் எழுவோம். 2024ஆம் ஆண்டில் அவரை மீண்டும் தோற்கடிக்கப் போகிறோம். ஆனால் அது எளிதாக இருக்காது. உங்கள் ஒவ்வொருவரும் அதைச் செய்ய எனக்கு நீங்கள் பின்னால் இருக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: நேபாளத்தில் அரசியல் சடுகுடு|கூட்டணிக்கட்சிகள் விலகல்.. ஆளும் அரசுக்கு சிக்கல்; அமைகிறது புதிய ஆட்சி!

அதிபர் ஜோ பைடன்
டிரம்ப் vs பைடன்; அனல் பறந்த நேரடி விவாதம்... குற்றச்சாட்டுகளும் பதில்களும்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com