அமெரிக்காவைச் சேர்ந்த இசைக் கலைஞர் மற்றும் டி.ஜே-வான காலீத் என்பவர், சொந்தமாக ஆல்பம் தயாரித்து வெளியிட்டு வருகிறார். மேலும் சில நிறுவனங்களுக்கும் இசையமைத்தும் வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகானத்திலுள்ள மியாமி பகுதியில் இவரின் இசைக் கச்சேரி ஒன்று நடைபெற்றது.
இந்த கச்சேரிக்கு வந்திருந்த காலீத், காரிலிருந்து கச்சேரி நடைபெறும் மேடைக்கு நடந்துசென்றால் தன் ஷூக்கள் அழுக்காகிவிடும் என்பதற்காக, பாதுகாவலர்களை அழைத்து மேடைவரை தன்னை தூக்கிச்செல்ல வலியுறுத்தியுள்ளார். அவர்களும் சிரமப்பட்டும் தூக்கிச்சென்றுள்ளனர்
இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகியது. இதையடுத்து, அவருக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்து வருகின்றன. பலரும் கண்டனப் பதிவுகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
‘இதற்காக பாதுகாவலர்களுக்கு தனி ஊதியம் ஏதும் தரப்போவதில்லை’, ‘அவர்கள் தூக்குவதற்குச் சிரமப்படுகிறார்கள்’, ‘இது முட்டாள்தனமான விஷயம்’ என பலர் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.