“எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன்” 180 வயது வரை வாழ விரும்பும் அமெரிக்க கோடீஸ்வரர்!

“எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன்” 180 வயது வரை வாழ விரும்பும் அமெரிக்க கோடீஸ்வரர்!
“எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன்” 180 வயது வரை வாழ விரும்பும் அமெரிக்க கோடீஸ்வரர்!
Published on

அமெரிக்காவின் நியூ மெக்சிகோவை சேர்ந்தவர் 47 வயதான டேவ் ஆஸ்ப்ரே. தொழிலதிபரான அவர் 180 வயது வரை வாழ விரும்புகிறார். அதற்காக தனது ஸ்டெம் செல்களை உடலுக்குள் செலுத்திக் கொள்ளும் சிகிச்சையை அவர் எடுத்துக் கொண்டு வருகிறார். அதை செய்ய ஒரு அமர்வுக்கு (சிட்டிங்) இந்திய மதிப்பில் 87 லட்ச ரூபாய் செல்வாகிறதாம். இருந்தாலும் பரவாயில்லை நான் 2153 வரையிலாவது வாழ்ந்தாக வேண்டுமென்ற விருப்பத்துடன் பணத்தை செலவழித்து வருகிறார் அவர். 

“வயதாகும் போது நமது ஸ்டெம் செல்களும் அதோடு சேர்ந்து காலியாகி விடும். எனக்கும் தான். நான் அதை தடுக்க என்ன செய்கின்றேன் என்றால் இடைவிடாது உண்ணா நோன்பு இருக்கிறேன். அதன் மூலம் அதிக ஸ்டெம் செல்களை பெறுகிறேன். அதை எனது உடலுக்குள் தேவையான இடங்களுக்கு நகர்த்திக் கொள்கிறேன். அதன் மூலம் நான் என்றுமே எவர்கிரீன் இளைஞனாக இருப்பேன்” என்கிறார் அவர். 

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com