அமெரிக்க வரலாற்றில் முதல் முறையாக அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம், 2-வது முறையாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
பிரதிநிதிகள் சபையில் நடைபெற்ற வாக்கெடுப்பில், ட்ரம்ப்புக்கு எதிராக 232 உறுப்பினர்கள் வாக்களித்தனர். அவருக்கு ஆதரவாக 197 உறுப்பினர்களும் வாக்களித்தனர். குடியரசு கட்சி உறுப்பினர்கள் 10 பேர், அதிபர் ட்ரம்ப்புக்கு எதிராக வாக்களித்தும் இங்கே கவனிக்கத்தக்கது.
ட்ரம்ப்பின் பதவிக் காலம் வரும் 20ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில், பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதால் செனட் சபையில் ட்ரம்ப் மீது விசாரணை நடைபெறும். செனட் சபையில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் எதிராக வாக்களித்தால் ட்ரம்ப் பதவி நீக்கப்படுவார்.
கடந்த 6ஆம் தேதி ட்ரம்பின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டதில் 5 பேர் உயிரிழந்தனர். நாடாளுமன்றத்தில் வன்முறை செய்ய தூண்டினார் என்பதே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீதான குற்றச்சாட்டு.
முன்னதாக, ஜோ பைடனை பழிவாங்கும் நோக்கில் செயல்பட்டதாக ட்ரம்ப்புக்கு எதிராக 2019-இல் ஏற்கனவே பதவி நீக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.