''அன்பின் அழகான கவிதை’’ - முகம் தெரியாதவரின் கருணையால் நெகிழ்ந்த பெண் எழுத்தாளர்

''அன்பின் அழகான கவிதை’’ - முகம் தெரியாதவரின் கருணையால் நெகிழ்ந்த பெண் எழுத்தாளர்
''அன்பின் அழகான கவிதை’’ -  முகம் தெரியாதவரின் கருணையால் நெகிழ்ந்த பெண் எழுத்தாளர்
Published on

அமெரிக்காவைச் சேர்ந்த பத்திரிகையாளரும் புகழ்பெற்ற எழுத்தாளருமான எலிசபெத் கில்பெர்ட்டின் காரின் கண்ணாடியை மூடியதுடன் ஒரு வாசகத்தையும் எழுதிவைத்து ஒரு முகம் தெரியாத நபர், தன் கருணையால் நெகிழவைத்துள்ளார். இதுதொடர்பாக அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

ஈட் ப்ரே ஆப் லவ் என்ற நூலின் மூலம் எழுத்துலகில் பிரபலமாகப் பேசப்படும் எலிசபெத் கில்பெர்ட், தன் காரின் கண்ணாடியை மூடாமல் சென்றுவிட்டார். பல நாட்களுக்குப் பிறகு திரும்பிவந்து பார்த்தவருக்கு எக்கச்சக்க ஆச்சரியம். அதனை ஒருவர் துணியால் மூடியதுடன் சில அன்பான வார்த்தைகளையும் எழுதிவைத்துச் சென்றுள்ளார். அதில், "உங்கள் கார் கண்ணாடி திறந்திருக்கிறது. மழை வரப்போகிறது. என்னால் முடிந்ததை செய்திருக்கிறேன்" என்று அந்த குறிப்பில் எழுதப்பட்டுள்ளது.

இந்தக் கருணைமிகு செயலைப் பற்றி எலிசபெத் சிலாகித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ளார்.அதில்,

"அந்த வாசகங்களில் அன்பின் அழகான கவிதையைப் பாருங்கள் " என்று குறிப்பிட்டுள்ளார். அவரது காருக்கு அருகில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த பச்சை நிற வாகனத்தில் வந்த நபர்தான் கார் கண்ணாடியை மூடியதாகவும் அந்தக் குறிப்பில்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

"நான் அந்தக் குறிப்பைப் பார்த்தேன். ஆனால் அந்த பச்சைநிற வாகனம் சென்றிருந்தது. யார் இதைச் செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவரை நேசிக்கிறேன். ஒரு முகம் தெரியாதவரின் கருணைக்கு நான் நன்றி தெரிவிக்கிறேன்" என்றும் எழுத்தாளர் எலிசபெத் கில்பெர்ட் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவுக்கு 87 ஆயிரம் 'லைக்குகள்' கிடைத்திருக்கின்றன.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com