"அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்வதை தவிர்க்கவும்" - அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு

"அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்வதை தவிர்க்கவும்" - அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு
"அமெரிக்காவிலிருந்து இந்தியா செல்வதை தவிர்க்கவும்" - அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு
Published on

இந்தியாவில் கொரோனா பாதிப்பு உயர்ந்த வண்ணம் இருப்பதால் அங்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

கொரோனா இரண்டாவது அலையில் நாடு முழுவதும் ஜெட் வேகத்தில் வைரஸ் பரவி வருகிறது. இந்த சூழலில் அமெரிக்க நோய்க்கட்டுப்பாட்டு அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும் என கூறியுள்ளது.

கட்டாயம் இந்தியாவிற்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டால் இரண்டு டோஸ் தடுப்பூசிகளையும் போட்டு கொண்ட பின்னர் செல்லுங்கள் என அறிவுரை வழங்கியுள்ளது. ஏற்கனவே பிரிட்டன் அரசும் இந்தியாவிற்கு பயணம் மேற்கொள்வது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com