அமெரிக்காவில் ஒரே நாளில் 10 லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் அண்மைக்காலமாக கொரோனா பாதிப்பு அதிகரித்த வண்ணம் இருக்கிறது. நேற்று ஒரே நாளில் மட்டும் 10 லட்சத்து 42 ஆயிரம் பேருக்கு வைரஸ் பரவி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பதிவான உச்சபட்ச கொரோனா பாதிப்பு இதுவாகும்.
ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைகழக புள்ளி விவரப்படி அமெரிக்காவில் கடந்த வாரத்தில் மட்டும் 100இல் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரான் பரவல் வேகமெடுத்தது மற்றும் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்கள் உள்ளிட்ட காரணங்களால் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை அடுத்து நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து அதிபர் ஜோ பைடன், இன்று மருத்துவ துறை நிபுணர்களுடன் ஆலோசனை நடத்த உள்ளார்.