"இஸ்ரேலுக்கு நாங்க இருக்கோம்.." அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அதிரடி

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதக் குழுவின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார்.

இஸ்ரேல் ஹமாஸ் போர் உச்சகட்டத்தை தொட்டுள்ளது. இரு தரப்பில் இருந்தும் மேற்கொள்ளப்படும் மூர்க்கமான தாக்குதலால் அப்பாவி பொதுமக்களும் பாதிப்பிற்கு உள்ளாகின்றனர். போரில் இதுவரை 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

இந்த நிலையில், அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இஸ்ரேல் மீதான ஹமாஸ் தீவிரவாதக் குழுவின் தாக்குதலை வன்மையாகக் கண்டித்துள்ளார். ‘இது மிகவும் கொடுமையான தீயச் செயல்’ என சாடிய பைடன், இஸ்ரேலுக்கான அமெரிக்காவின் ஆதரவை உறுதிப்படுத்தினார்.

ஜோ பைடன்
ஜோ பைடன்Twitter
ஜோ பைடன்
"தயவுசெய்து வாருங்கள்.." சர்வதேச நாடுகளை அழைத்த பாலஸ்தீன அரசு!

உளவுத் தகவல்களைப் பகிரவும் பிணைபிடிக்கப்பட்டோரை மீட்பதற்கான வல்லுநர்களை அனுப்பிவைக்கவும் அவர் உறுதியளித்தார். முன்னதாக, இஸ்ரேல் படைகளுக்கு உதவ அமெரிக்கா ஆயுதங்களை அனுப்பியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com