டிரம்ப் vs பைடன்; அனல் பறந்த நேரடி விவாதம்... குற்றச்சாட்டுகளும் பதில்களும்..

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டிரம்ப்பும் நேரடி விவாதத்தில் பங்கேற்றனர்.
விவாத நிகழ்ச்சி
விவாத நிகழ்ச்சிpt web
Published on

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், முன்னாள் அதிபர் டிரம்ப்பும் நேரடி விவாதத்தில் பங்கேற்றனர். அமெரிக்கா ஒரு தகுதியான தலைவரைப் பெற்றிருந்தால் உக்ரைன் - ரஷ்யா போர் தொடங்கியிருக்காது என டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வரும் நவம்பர் மாதம் நடைபெறும் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும், குடியரசுக் கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்பும் போட்டியிடவுள்ளனர். அதிபர் தேர்தலில் போட்டியிடுபவர்கள் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபடுவது அந்நாட்டில் வழக்கம். அதன்படி, அட்லான்டாவில் நடைபெற்ற தனியார் தொலைக்காட்சி நடத்திய நிகழ்ச்சியில் இருவரும் நேரடியாக விவாதத்தில் இறங்கினர். இந்த முறை பார்வையாளர்கள் இன்றி நிகழ்ச்சி நடைபெற்றது.

விவாத நிகழ்ச்சி
EURO 2024 | முடிந்தது லீக் சுற்று... குரோயேசியா வெளியே... கடைசி நாளில் அசத்திய ஜார்ஜியா!

அரங்கத்திற்கு வந்த பைடனும், டிரம்பும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் கை குலுக்காமல் தங்களது இடத்திற்கு சென்றனர். முதலில் பேசத் தொடங்கிய டிரம்ப், ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் விவகாரத்தில் பைடன் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வாபஸ் பெறப்பட்டது வரலாற்றில் அவமானகரமான நாள் என்றும் டிரம்ப் விமர்சித்தார்.

டிரம்ப் எழுப்பிய கேள்விகளுக்கு அதிபர் ஜோ பைடன் நிதானமாக பதில் அளித்தார். டிரம்பின் ஆட்சியில் வேலைவாய்ப்பின்மை தலைவிரித்து ஆடியதாகவும், தற்காலிக பொருளாதார பேரழிவை அமெரிக்கா சந்தித்ததாகவும் பைடன் குற்றஞ்சாட்டினார். மேலும் கருக்கலைப்புக்கு கட்டுப்பாடுகள் கொண்டுவந்தது மோசமான செயல் என்றும் விமர்சித்தார். டிரம்பின் தவறான குடியேற்றக் கொள்கைகளால் தாயிடம் இருந்து குழந்தைகள் பிரிக்கப்பட்டதாகவும் சாடினார்.

விவாத நிகழ்ச்சி
தலைவிரித்தாடும் போதை பொருள் புழக்கம்: RTI கொடுத்த அதிர்ச்சி ரிப்போர்ட்

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com