அமெரிக்காவில் வசிக்கும் இந்தியா வம்சாவளி மாணவர் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், அவரின் மரணத்திற்கான காரணங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய வம்சாவளியான அகுல் தவான், அமெரிக்காவில் இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்து வருகிறார். இவரின் பெற்றோர் கலிபோர்னியாவின், சான் பிரான்சிஸ்கோ பகுதியில் வசிக்கின்றனர். ஒருநாள் வெளியே சென்ற அகுல் மற்றும் அவரது நண்பர்கள் சிலர், நன்கு குடித்து விட்டு இரவு தங்குவதற்காக விடுதி ஒன்றுக்கு சென்றுள்ளனர்.
விடுதியில் அகுல் திவானுக்கு மட்டும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால், அவரது நண்பர்கள் ஏற்கனவே அங்கு தங்கியுள்ளதால் அவர்களுக்கு அனுமதி கிடைத்துள்ளது.
இந்நிலையில், தனித்து விடப்பட்ட அகுல், கடும் குளிரில் விடுதியின் வாசலில் நின்று கொண்டிருந்துள்ளார். அவரை அழைத்து செல்ல வாகானங்களை அழைத்தும் இரண்டு முறை வந்த வாகனங்கள் அவரை ஏற்றி செல்ல மறுத்துள்ளது.
பின்னர், சிலமணிநேரங்களுக்கு பிறகு அவரின் நண்பர்கள் அகுலை தொடர்பு கொள்ள முயன்றபோது தொடர்பு கொள்ள முடியவில்லை.
இந்நிலையில், கேம்பஸ் போலீஸ்சாருக்கு தகவல் அளித்த அகுலின் நண்பர், அவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்த நாள் காலை கட்டிடம் ஒன்றின் பின்னால் இறந்து கிடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவரின் உடல் பிரதேச பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இறப்பிற்கான காரணங்கள் எதுவும் கண்டறியப்படவில்லை.
இதனைதொடர்ந்து, கடந்த ஜனவரி 20 ஆம் தேதி மரணம் அடைந்த இவரின் இறப்பிற்கான காரணங்கள் ஒரு மாதம் கழித்து கிடைத்துள்ளது. போலீசார், இவரின் இறப்பிற்கான காரணங்கள் குறித்து திடுக்கிடும் தகவல்கள் சிலவற்றை பகிர்ந்துள்ளனர்.அதில், அகுல்பலமுறை விடுதியின் உள்ளே நுழைய முயன்றபோதும் விடுதி ஊழியர்கள் அவரை அனுமதிக்காதது அங்கு இருந்த சிசிடிவில் பதிவாகியிருந்தது.மேலும் அன்று நள்ளிரவில் -2.7 டிகிரி அளவு கடும் குளிரரும், அதிக மதுபானம் அருந்தியதும் இறப்பிற்கான காரணம் என்று தெரியவந்துள்ளது.
இந்நிலையில் அகுலின் பெற்றோர்கள் காவல்துறையை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளனர், அதில், “அகுல் காணாமல் போன 10 மணி நேரத்திற்கு பிறகே அவரின் உடல் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்திற்கும் , காணாமல் போன இடத்திற்கும் இடையில் 200 அடி மட்டுமே. காவல் துறை விரைந்து செயல்பட்டிருந்தால் எங்கள் மகனை காப்பாற்றி இருக்கலாம். போலீசார் இரவில் தேடும் பணியை மேற்கொள்ளவில்லை, தேடுவது தொடர்பான நெறிமுறைகளை பின்பற்றவில்லை. மேலும் இல்லினாய்ஸ் பல்கலைக்கழக காவல்துறை அலட்சியமாக செயல்பட்டுள்ளது” என்று அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளனர்.
இந்நிலையில், கடும் குளிரால் மாணவர் ஒருவரின் உயிர் பறிப்போன சம்பவம்அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.